டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுங்க''.. மோடிக்கு, கடிதம் எழுதிய சோனியா காந்தி!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45-ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா.. மாஸ்க் போட்டுக்கோங்க. இல்லாட்டி ரூ.500 அபராதம் கட்டணும்..பாத்துக்குங்க! ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா.. மாஸ்க் போட்டுக்கோங்க. இல்லாட்டி ரூ.500 அபராதம் கட்டணும்..பாத்துக்குங்க!

ஊரடங்கால் பாதிக்கப்படும் குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. இந்தியாவில் தினமும் 2,00,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 80% பாதிப்புகள் உள்ளன. கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் போடப்படுகின்றன

தடுப்பூசிகள் போடப்படுகின்றன

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

மோடிக்கு சோனியா கடிதம்

மோடிக்கு சோனியா கடிதம்

தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் கொரோனா குறைந்தபாடில்லை. இதனால் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45-ல் இருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சோனியா காந்தி மேலும் கூறியிருப்பதாவது:-

ரூ. 6 ஆயிரம் கொடுங்கள்

ரூ. 6 ஆயிரம் கொடுங்கள்

மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தினால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும். ஊரடங்கால் பாதிக்கப்படும் குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் கடுமையான பற்றாக்குறை செய்திகள் வருகின்றன. இது கவலையளிக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் இந்த சவாலான காலங்களை அரசியல் எதிரிகளாகக் காட்டிலும் இந்தியர்களாக எடுத்துக் கொள்வது உண்மையான ராஜதர்மமாக இருக்கும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

English summary
Sonia Gandhi has written a letter to Prime Minister Narendra Modi urging him to reduce the age limit for coronavirus vaccination from 45 to 25 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X