மாதம் 15 ஆயிரம் முதல் 1.26 லட்சம் வரை.. விந்தணு தானம் செய்து இவ்வளவு சம்பாதிக்க முடியுமா? அடேங்கப்பா
டெல்லி: விந்தணு தானம் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையாக இருப்பதாகவும், மாதம் ரூ.2.5 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும் கூறி சமூக ஊடகங்களில் சமீபத்தில் ஒருவர் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, விந்தணு தானம் தொடர்பான விவாதங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் விந்தணு தானம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவும், அதற்கான ஊதியம் மிகக் குறைவாகவும் உள்ளது. அதேவேளையில், வெளிநாடுகளில் விந்தணு தானம் என்பது கண்ணியமான மற்றும் அதிக வருமானம் தரும் தொழிலாக உள்ளதாம். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பதிவு செய்யப்பட்ட விந்தணு வங்கிகள்
கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான விக்கி டோனர் திரைப்படம் இந்தியாவில் விந்தணு தானம் குறித்த பேச்சை பிரபலம் ஆக்கியது. இருப்பினும், இந்த நடைமுறை இன்னும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க களங்கத்தையும், தவறான புரிதலையும் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, பல மேற்கத்திய நாடுகளில் விந்தணு தானம் என்பது மரியாதைக்குரிய மற்றும் நல்ல ஊதியம் பெறும் தொழிலாகக் கருதப்படுகிறது.
விந்தணு தானம் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவை பற்றி ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் விந்தணு தானம் என்பது இன்னும் ஒரு தடை செய்யப்பட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நடைமுறை பற்றி போதுமான புரிதல் இல்லை. இருப்பினும், சில பதிவு செய்யப்பட்ட விந்தணு வங்கிகள் மற்றும் கருத்தரிப்பு கிளினிக்குகள் விந்தணு தானம் செய்பவர்களுக்கு பணம் செலுத்துகின்றன.
ரூ.4,000 முதல் ரூ.8,000 வரை
பொதுவாக, ஒரு இந்தியர் விந்தணு தானம் செய்யும் போது ஒரு முறை தானம் செய்வதற்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கிளினிக், நன்கொடையாளரின் விவரம் மற்றும் அவர்களின் மாதிரியின் தரத்தைப் பொறுத்து இந்த தொகை மாறுபடும். ஒரு டோனர் வாரத்திற்கு இரண்டு முறை தானம் செய்தால், அவர்கள் மாதத்திற்கு ரூ.4,000 முதல் ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம்.
டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் தேவை அதிகமாக இருப்பதால், மாத வருமானம் ரூ.8,000 முதல் ரூ.15,000 வரை உயரக்கூடும். இருப்பினும், நன்கொடையாளரின் பின்னணியை பொறுத்து இது மாறுபாடும். கல்வித் தகுதி (மருத்துவம் அல்லது பொறியியல் பட்டம் போன்றவை), உடல் அமைப்புகள் (சருமம், நீல நிற கண்கள் அல்லது உயரம் போன்றவை) உள்ளவர்களுக்கு அதிக கட்டணம் கிடைக்கும்.
மரியாதைக்குரிய தொழிலாக
இந்திய தம்பதிகளிடையே அழகான நிறம் மற்றும் குறிப்பிட்ட அம்சங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இருப்பினும், இந்த தொகை என்பது வெளிநாடுகளில் வழங்கப்படும் தொகையை விடக் கணிசமாகக் குறைவு என்றே சொல்லப்படுகிறது. பிரபல ஆங்கில செய்தி இணையதளம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விந்தணு தானம் பொதுவாக ஒரு மரியாதைக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள சியாட்டில் ஸ்பெர்ம் வங்கியில் டோனர்கள், ஒரு முறை விந்தணு தானம் செய்வதற்கு ரூ. $100 (தோராயமாக ரூ.8,400) பெற முடியும். இதன் மூலம் மாதத்திற்கு $1,500 (சுமார் ரூ.1.26 லட்சம்) வரை வருமானம் ஈட்டுகிறார்கள்.
பெரிய விந்தணு வங்கிகள்
கலிபோர்னியா ஸ்பெர்ம் பேங்க்கில் உள்ள விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஒரு சேம்பிளுக்கு சுமார் $150 (தோராயமாக ரூ.12,600) வரை சம்பாதிக்கலாம். அவர்களின் சராசரி மாத வருமானம் $700 முதல் $1,200 வரை (சுமார் ரூ.58,000 முதல் ரூ.1 லட்சம் வரை) இருக்கும். ஐரோப்பாவில், ஒவ்வொரு தானத்திற்கும் €40 (சுமார் ரூ.3,600) வழங்குகிறது. மேலும் மாதத்திற்கு நான்கு முறை வரை தானம் செய்யலாம்.
Cryos International போன்ற பெரிய விந்தணு வங்கிகள், ஒவ்வொரு தானத்திற்கும் $35 போனஸ் மற்றும் 10 தானங்களுக்கு $250 கூடுதலாக வழங்குகின்றன. இதன் மூலம் மாத வருமானம் $720 (சுமார் ரூ.60,000) ஆக இருக்கும். நீண்ட காலம் தானம் செய்பவர்கள் ஆறு மாதங்களில் $10,000 (சுமார் ரூ.8.4 லட்சம்) வரை கிடைக்கும்.
இந்தியாவில் தடை
ஊதியத்துடன் கூடுதலாக, இந்த நாடுகளில் உள்ள விந்தணு டோனர்கள் இலவச உடல்நலப் பரிசோதனைகள், கருவுறுதல் சோதனைகள் மற்றும் சில நேரங்களில் வருடாந்திர உடல் பரிசோதனைகள் போன்ற கூடுதல் சலுகைகளையும் பெறுகிறார்கள்.
இந்தியாவில் விந்தணு தானத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி இருந்தாலும் வணிக ரீதியில் பணம் ஈட்டும் நோக்கில் இதை செய்வதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பட்டத்தக்கது. இதன்படி, விந்தணு தானம் செய்பவர்களுக்கு பணம் வழங்குவது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications