ராஜபக்சே அழைப்பை ஏற்று... நவராத்திரி விழாவை கொண்டாட இலங்கை செல்கிறார் சுப்ரமணிய சுவாமி..!
டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று நவராத்திரி விழாவை கொண்டாட இலங்கை செல்கிறார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி.
மேலும், கொழும்புவில் இலங்கை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மத்தியில் சுப்ரமணிய சுவாமி உரை நிகழ்த்தவும் உள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், சுப்ரமணிய சுவாமியும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர்
இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மொரோகோடாவை தமது இல்லத்துக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்த சுப்ரமணிய சுவாமி, தாம் விரைவில் இலங்கைக்கு செல்லவுள்ளதாக நேற்று ட்விட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார். தனது பயணத் திட்டம் முழுமையடைந்த பிறகு அது தொடர்பாக மேலும் சில தகவல்களை பகிர்வதாக கூறியிருந்தார்.

நவராத்திரி விழா
அதன் படி இன்று சுப்ரமணியசுவாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நவராத்திரி விழாவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக என்னை இலங்கைக்கு அழைத்துள்ளார் எனக் கூறியிருக்கிறார். மேலும், ராஜபக்சே தமக்கு விடுத்துள்ள அழைப்பை பகிர்வதில் மகிழ்ச்சி கொள்வதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இம்மாதம் இலங்கை வருகிறார் என்ற செய்தியை இலங்கை ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு
இதனிடையே 'தேசிய பாதுகாப்பு' என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மத்தியில் தாம் உரை நிகழ்த்த உள்ளதாகவும் சுப்ரமணிய சுவாமி தெரிவித்திருக்கிறார். விடுதலை புலிகளுக்கு எதிரான ராஜபக்சேவின் நடவடிக்கைகள் அவர்கள் இருவரையும் நண்பர்களாக்கியது. இதனிடையே சுப்ரமணிய சுவாமியின் இலங்கை பயணத்திற்கு ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் எனத் தெரிகிறது.

மீனவர் நலன்
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்வதால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சுப்ரமணிய சுவாமி தனது இலங்கை பயணத்தின் போது, தமிழக மீனவர்கள் நலன் குறித்து ராஜபக்சேவிடம் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதனிடையே ராஜபக்சே மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மட்டும் சுப்ரமணிய சுவாமி ஏற்கனவே பிரத்யேகமாக இலங்கை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications