இலங்கையால் 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்கள் கைது- 365 படகுகள் நாட்டுடைமை- அதிர்ச்சி தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை அரசால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 365 மீன் பிடி படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை மொத்தம் 268 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் நாகை முதல் ராமேஸ்வரம் வரை தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ, தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதுடன் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது.

fishermen tamilnadu srilanka

தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறது. ஆனால் மத்திய அரசு தரப்பில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மீனவர்கள் குற்றச்சாட்டு.

மேலும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மிக மிக கடுமையான அபராதத் தொகை விதிப்பது, 6 மாதம் முதல் இரண்டரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பது, பறிமுதல் செய்யப்படும் படகுகளை நாட்டுடைமையாக்கிவிடுவது என்கிற அட்டூழியங்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது. இதற்காக அவ்வப்போது இலங்கை அரசு சட்ட திருத்தங்களையும் மேற்கொள்கிறது.

இதனிடையே தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகுகளின் தற்போதைய நிலைமை என்ன என்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

10 ஆண்டுகளில் 3,288 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

2014-ம் ஆண்டு முதல் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் எண்ணிக்கை

2014-ல் 787
2015-ல் 454
2016-ல் 290
2017-ல் 453
2018-ல் 148
2019-ல் 203
2020-ல் 59
2021-ல் 159
2022-ல் 237
2023-ல் 230
2024 ஜூலை வரை 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 3,288 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களின் படகுகள் நிலைமை என்ன?

2014-ல் 164
2015-ல் 71
2016-ல் 51
2017-ல் 82
2018-ல் 14
2019-ல் 41
2020-ல் 9
2021-ல் 19
2022-ல் 34
2023-ல் 34
2027-ல் ஜூலை வரை 39 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் தமிழ்நாட்டு மீனவர்களின் 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 365 படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+