15.56 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகித்த மத்திய அரசு- தமிழகத்துக்கு கிடைத்ததும் கையிருப்பும்!
டெல்லி: நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 15.56 கோடி கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகித்துள்ளது. இந்த நிலையில் மே 1-ந் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக முதியவர்கள், முன்களப் பணியாளர்களுக்கும் 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் போடப்பட்டது. 3-வது கட்டமாக 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

3-ம் கட்ட தடுப்பூசி
இந்த 3-வது கட்ட் தடுப்பூசி மே 1-ந் தேதி முதல் போடப்படும். ஆனால் பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட முடியாது என கையை விரித்து வருகின்றன. ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இதனை தெரிவித்துள்ளன. ஆனால் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கையிருப்பை கொண்டு 3-ம் கட்ட தடுப்பூசிகள் போடப்படும் என தெரிவித்துள்ளன.

15.5 கோடி தடுப்பூசிகள்
நாட்டின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மொத்தமாக இதுவரை 15,53,11,140 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன. இதில் 14,42, 76,074 தடுப்பூசிகள் ஏற்கனவே போடப்பட்டுள்ளன. இன்னமும் 1,10,35,066 கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மேலும் 97,05,000 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகத்துக்கு கிடைத்தது?
மாநிலங்கள் பெற்ற தடுப்பூசிகள் விவரம்: மகாராஷ்டிரா மாநிலம் 1,58,62,470; ராஜஸ்தான் 1,34,12,360; உ.பி. 1,30,96,780; குஜராத் 1,27,69,330; மேற்கு வங்கம் 1,06,83,340; கர்நாடகா 94,47,900; தமிழகம் 65,28,950 தடுப்பூசிகளை இதுவரை பெற்றுள்ளன. இதில் தமிழகம் 8.03% தடுப்பூசிகளை வீணாக்கி உள்ளது. மணிப்பூர் மாநிலம் 8.4% தடுப்பூசிகளை வீணாக்கி இருக்கிறது.

தமிழக கையிருப்பு நிலவரம்
தமிழகத்தில் கையிருப்பாக 7,10,331 கொரோனா தடுப்பூசிகள் உள்ளன. ஆந்திராவில் 2,17,530; பீகாரில் 7,04,297; டெல்லியில் 3,25,805 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications