மத, மொழி சிறுபான்மையினரை மாநிலங்களே அறிவிக்கலாம்... உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு
டெல்லி: மத, மொழி அடிப்படையில் சிறுபான்மையினர்கள் யார் என மாநில அரசுகளே அறிவிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்களில் அவர்களை சிறுபாண்மையினர்களாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்கள், சில மாநிலங்களில் சிறுபான்மையினர்களாக இருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையின் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்துக்கள் குறைவாக உள்ள மாநிலங்கள்
அந்த மனுவில், "2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்துக்கள் குறைவான எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். அவர்களை 2002 டி.எம்.ஏ. பாய் வழக்கின்படி சிறுபான்மையினர்களாக அறிவிக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கான பலன்கள் கிடைக்க வேண்டும்
இந்த மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு தேசிய மக்கள் தொகை சதவீதத்தின் காரணமாக சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் அதனால் வரும் பயன்கள் கிடைக்காமல் இருக்கின்றன. எனவே மாநில அளவில் சிறுபான்மையினர்கள் யார் என்று அடையாளம் கண்டு அறிவிக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய அரசு பதில் மனு
இந்த வழக்கு மீதான பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், "யார் சிறுபான்மையினர் என்று அடையாளம் காண்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் வருகிறது. எனவே மத்திய அரசு போல் மாநில அரசுகளும் யார் சிறுபான்மையினர் என தங்கள் மாநில வரம்புக்குள் சட்டம் இயற்ற முடியும். மத மற்றும் மொழி சிறுபான்மையினர் நாடு முழுவதும் பரவி இருக்கின்றனர். பெரும்பான்மையாக ஒரு மாநிலத்தில் வசிப்பவர்கள் மற்ற மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ளனர்.

முன்னுதாரணமாக விளங்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா
கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், துளு, லம்பாடி, இந்தி, கொங்கணி, குஜராத்தி, மராத்தி மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களை மொழி சிறுபான்மையினராக அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது. அதேபோல் மகாராஷ்டிராவில் யூத மதத்தவர்களும்ம் சிறுபான்மையினத்தவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications