‛தள்ளியே இருங்க’.. ரஷ்யாவுக்காக உக்ரைனில் போரிடும் 4 இந்தியர்கள்! வெளியுறவுத்துறை பரபர எச்சரிக்கை
டெல்லி: ரஷ்யாவுக்காக கர்நாடகா, தெலுங்கானாவை சேர்ந்த 4 இந்தியர்கள் உக்ரைனில் போரிட்டு வரும் நிலையில் அவர்கள் தங்களை மீட்க வேண்டும் என கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அட்வைசுடன் பரபரப்பான எச்சரிக்கை செய்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இந்த போர் 2வது ஆண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் இந்த போர் மட்டும் முடிவுக்கு வரவில்லை.

இந்த போர் விஷயத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளன. அதோடு உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றன. இந்தியா இந்த போரில் நடுநிலை வகிக்கிறது. ரஷ்யா போரை கைவிட்டு பிரச்சனைக்கு பேசி தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் இந்தியாவை சேர்ந்த 4 பேர் ரஷ்யாவின் யுத்த களத்தில் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் வாக்னர் படையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர், கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுவதாக கூறப்படுகிறது. இவர்கள் தற்போது தங்களது குடும்பங்களுக்கு வீடியோ அனுப்பி உள்ளனர்.
தங்களை எப்படியாவது மத்திய அரசு மூலம் மீட்க வேண்டும் என அவர்கள் கண்ணீருடன் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் இந்தியர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என கர்நாடகா அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரஷ்யாவில் உள்ள இந்தியர்களுக்கு நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இருந்து இந்தியர்கள் விலகியே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
‛‛ஒரு சில இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவான வேலைகளுக்கு கையெழுத்திட்டுள்ளதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இதுதொடர்பாக ரஷ்ய தூதரக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்களை ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே முன்கூட்டியே வெளியேற்றம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் போர் நடவடிக்கையில் இருந்து விலகியே இருக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications