Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச நடிகை வழக்கு.. பாஜகவில் இணையும் டிரம்ப்.. மார்பிங் போட்டோ போட்டு மஹூவா மொய்த்ரா கிண்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபாச நடிகையுடன் உல்லாசமாக இருந்ததோடு, அதனை வெளியே சொல்லாமல் இருக்க பிரசார நிதியை அவருக்கு வழங்கிய குற்றச்சாட்டில் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் சரண்டர் ஆகலாம் என கூறப்படும் நிலையில் டொனால்ட் டிரம்ப் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாஜகவில் இணைய உள்ளதாக போட்டோ போட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கிண்டல் செய்துள்ளார்.

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். அதன்பிறகு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார்.

அமெரிக்காவை பொறுத்தமட்டில் அதிபர் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகளாகும். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு மீண்டும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளை அவர் இப்போதே தொடங்கிவிட்டார்.

 ஆபாச நடிகையுடன் உல்லாசம்

ஆபாச நடிகையுடன் உல்லாசம்

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளார். அதாவது 2007 ம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் கடந்த 2016 ல் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வெளியே பேசாமல் இருக்க டொனால்ட் டிரம்ப் பிரசார நிதியில் இருந்து ஸ்டோர்மி டேனியலுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது அப்போது பெரும் சர்ச்சையான போதிலும் கூட அந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார்.

 கைது செய்ய வாய்ப்பு

கைது செய்ய வாய்ப்பு

இந்நிலையில் தான் அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் மீண்டும் டொனால்ட் டிரம்ப் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கி உள்ளார். அதாவது பிரசார நிதியில் இருந்து ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியலுக்கு பணம் வழங்கியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தான் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர் தனது ஆதரவாளர்களை போராடும்படி தெரிவித்து இருந்தார்.

 நீதிமன்றத்தில் சரண்டராக..

நீதிமன்றத்தில் சரண்டராக..

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டொனால்ட் டிரம்ப் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் இன்னும் அது நடைபெறவில்லை. இந்நிலையில் தான் இன்று டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண்டர் ஆகலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அமெரிக்காவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 மஹூவா மொய்த்ரா கிண்டல்

மஹூவா மொய்த்ரா கிண்டல்

இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா டொனால்ட் ட்ரம்ப் பாஜகவில் இணைவதாக வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். அதாவது டொனால்ட் டிரம்ப் 2016 காலக்கட்டத்தில் தேர்தல் பிரசார நிதியை ஆபாச பட அழகி ஸ்டோர்மி டேனியலுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மஹூவா மொய்த்ரா இந்த பதிவை செய்துள்ளார்.

 பாஜக துண்டில் டிரம்ப்

பாஜக துண்டில் டிரம்ப்

இந்த பதிவில் மஹூவா மொய்த்ரா ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த படம் அறை ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி நிற்க டொனால்ட் டிரம்ப் பாஜக கட்சி துண்டை கழுத்தில் அணிந்து வரும்படியாக உள்ளது. இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக மஹூவா மொய்த்ரா, ‛‛இது வாட்ஸ்அப் பார்வர்டு அலர்ட். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க டொனால்ட் டிரம்ப் பாஜகவில் இணைகிறார்'' என தெரிவித்துள்ளார்.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

அதாவது இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மத்திய பாஜக அரசு மிரட்டுவதாகவும், வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், அதன்பிறகு அந்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தால் வழக்கு கைவிடப்படுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் தான் டொனால்ட் டிரம்ப் தனது கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் நோக்கில் பாஜகவில் இணைவதாக வாட்ஸ்அப்பில் பரவிய தகவலை மஹூவா மொய்த்ரா தனது ட்விட்டரில் வேடிக்கையாக பதிவிட்டு பாஜகவை சீண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+