அதிர்ந்த டெல்லி.. ஸ்டன் ஆன இந்திரா.. சீதாராம் யெச்சூரி செய்த தரமான சம்பவம்.. வரலாற்று போட்டோ பின்னணி
டெல்லி: சிபிஎம் கட்சியின் சீதாராம் யெச்சூரி 72 வயதில் இன்று காலமானார். இந்திய அரசியலில் முக்கிய இடதுசாரி தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சீதாராம் யெச்சூரியின் வாழ்க்கையில் மிக முக்கியமான போட்டோ அவரது கல்லூரி காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த போட்டோ தான். இந்த போட்டோ பின்னணி.. இதன் காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
சீதாராம் யெச்சூரி தனது முதுகலைப் பட்டத்தை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தான் பயின்றார். அவரது அரசியல் வாழ்க்கையை மாற்றியதே ஜேஎன்யு காலம் தான்.

அவர் இடதுசாரி கொள்கைகளை நோக்கி நகர்ந்ததும் இந்த காலகட்டத்தில் தான். அப்போது ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி நடத்திய போராட்டத்தால் இந்திரா காந்தி பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சீதாராம் யெச்சூரி: அவர் ஜேஎன்யு-இல் படித்துக் கொண்டு இருந்த போது தான் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது போராட்டம் நடத்தியதாக 1975ம் ஆண்டு சீதாராம் யெச்சூரி கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் சிறையில் இருந்த அவர், வெளியே வந்ததும் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவராகத் தேர்வானார்.
ஜேஎன்யு வேந்தராக இந்திரா காந்தி தொடர்ந்த நிலையில், அவர் அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திரா காந்தி பதவி விலக மறுத்த நிலையில், சீதாராம் யெச்சூரி தனது சக மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தார். அப்போதைய துணைவேந்தராக இருந்த பி.டி. நாக் சவுத்ரியை வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதற்குப் பதிலடி தரும் வகையில் அப்போதைய அரசு பல்கலைக்கழகத்தை மூட உத்தரவிட்டது..
அரசு உத்தரவே காலி: ஆனால் ஜேஎன்யு மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து இந்த உத்தரவை காலி செய்தனர். பல்கலைக்கழகம் வழக்கம் போல் இயங்குவதை உறுதி செய்தனர். 24 மணி நேரமும் நூலகம் திறந்து இருந்தது. வகுப்புகள் அனைத்தும் நடத்தப்பட்டன. மாணவர்கள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் கல்வி கற்றனர். இந்த நிலை ஏதோ ஓரிரு நாட்கள் மட்டும் நீட்டிக்கவில்லை. சுமார் 40 நாட்கள் இதே நிலை நீடித்தது.
சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அந்த நாட்களை யெச்சூரி நினைவு கூர்ந்திருந்தார். அதாவது அவர் கூறுகையில், "அப்போது பணப் பற்றாக்குறை இருந்தது. பல்கலைக்கழகத்தை மூட அரசு உத்தரவிட்டு இருந்ததால்.. நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால் பணத்தைத் திரட்ட நாங்கள் சரோஜினி நகர் மார்க்கெட் மற்றும் கன்னாட் பிளேஸ் ஆகிய இடங்களுக்குச் செல்வோம்.. எங்கள் கழுத்தில் 'பல்கலைக்கழகம் செயல்படுகிறது, துணை வேந்தர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற அட்டை இருக்கிறோம். அதைப் பார்த்து பலரும் நன்கொடை கொடுத்தனர்" என்றார்.
பேரணி: அப்போது 1977ல் எமர்ஜென்சி வாபஸ் பெறப்பட்ட பிறகு நடந்த லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைந்தார். இருப்பினும் ஜேஎன்யு வேந்தர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். அவர் உடனடியாக வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சீதாராம் யெச்சூரி தலைமையில் மாணவர்கள் இந்திரா வீட்டிற்குப் பேரணியாகச் சென்றனர்.
போட்டோ: இந்தச் சம்பவத்தை சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்த அவர், "நாங்கள் 500 பேர் இருந்தோம். ஆனால், 5 பேர் மட்டுமே இந்திராவை நேரில் சந்திக்க முடியும் என அவரது உதவியாளர் எங்களிடம் கூறினார். ஆனால் இதை நாங்கள் ஏற்கவில்லை. பிறகு சில நிமிடங்களில் இந்திரா காந்தியே வெளியே வந்தார். அப்போது அவருக்கு எதிரான தீர்மானங்களை அவர் முன்பாகவே வாசித்தேன். அந்த தீர்மானங்களையும் அவர் வாங்கிக் கொண்டார். மிகுந்த நாகரீகத்துடன் இந்திரா நடந்து கொண்டார்.. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் வேந்தர் பதவியை ராஜினாமாவும் செய்தார்" என்றார்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தான் ஜேஎன்யு வரலாற்றில் மிக முக்கிய போட்டோக்களில் ஒன்றாக மாறியது. போராட்டத்தை முன்னின்று நடத்திய யெச்சூரிக்கு அருகில் மாணவர்கள் சூழ இந்திரா காந்தி அதில் நின்று கொண்டு இருப்பார். இதுதான் அந்த ஒற்றை ஐக்கானிக் போட்டோ பின்னணியில் இருக்கும் வரலாறு.. பிரகாஷ் காரத்துடன் இணைந்து ஜேஎன்யுவை அசைக்க முடியாத இடதுசாரி கோட்டையாக மாற்றுவதில் யெச்சூரிக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications