டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூச்சே விடமுடியல.. புகையில் திணறும் டெல்லி.. காற்று மாசு 38% எகிறியது.. வைக்கோல் எரிப்புதான் காரணமா?

டெல்லி பகுதிகளில் எழுந்துள்ள புகைக்கு 38 சதவீதம் வயல்களில் கழிவுகளை எரிப்பதால் வரும் புகை காரணமாம்

Google Oneindia Tamil News

டெல்லி: என்சிஆர் மற்றும் டெல்லி பகுதிகளில் எழுந்துள்ள புகைக்கு 38 சதவீதம் வயல்களில் கழிவுகளை எரிப்பதால் வரும் புகைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது..!!

நம் இந்தியாவை பொறுத்தவரை எந்த நகரமும் உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை எட்டவில்லை. குறிப்பாக வட இந்தியாவில் காற்றின் தரம் மிக மோசமாகவே இருக்கிறது..

தொடர்ந்து இப்போதும், உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக நம் டெல்லி திகழ்கிறது.. இந்த மாசு அளவீடானது, வருடா வருடம் உயர்ந்துகொண்டே செல்கிறது..

டெல்லி செங்கோட்டை தாக்குதல் தீவிரவாதி முகமது ஆரிப் தூக்கு தண்டனை உறுதி- சீராய்வு மனு டிஸ்மிஸ்!டெல்லி செங்கோட்டை தாக்குதல் தீவிரவாதி முகமது ஆரிப் தூக்கு தண்டனை உறுதி- சீராய்வு மனு டிஸ்மிஸ்!

 அடர்பனி

அடர்பனி

டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்காக, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், காற்று மாசால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளது.. அதேபோல, இந்தியாவிலேயே குளிர் காலத்தில் ஏற்படும் இந்த அடர் பனி காரணமாகவே, பள்ளிகளுக்கும், ஆபீஸ்களுக்கும் விடுமுறை அறிவிப்பது டெல்லி அரசு தான்...

 திணறும் டெல்லி

திணறும் டெல்லி

அதன்படி, குளிர்காலத்தில் ஏற்படும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க நவம்பர் 1, 2022 முதல் பிப்ரவரி 28, 2023 வரை நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவது தடை செய்யப்படும் என்று டெல்லி அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சுற்றுப்புற சூழல் அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் பேசியபோது, "வாகன மாசுபாட்டை குறைக்க, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்.. மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்... அரசியல் மூலம் இந்த காற்று மாசு பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 38 %

38 %

எனினும், டெல்லியின் நொய்டாவில் காற்று மாசு தற்போது மிக மிக மோசமான நிலைமைக்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.. இது குறித்து மத்திய புவிஅறிவியல் துறையின் திட்ட இயக்குநர் குப்ரான் பீக் சொல்லும்போது, "டெல்லியில் காற்று மாசு 38 சதவீதம் அதிகரித்துவிட்டது... வயல்களில் கழிவுகளை எரிப்பது டெல்லிவரை வருகிறது.. டெல்லியின் காற்று தரம் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது. இன்று காலை காற்றின் தரக் குறியீடு 419 என்ற அளவில் இருந்தது... டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருக்கிறது. எனினும், சனிக்கிழமை முதல் காற்று வீசக்கூடும், காற்றின் திசை மாறும் என்று கணித்திருப்பதால் அதன்பின் ஓரளவு நிம்மதி கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 400 குறியீடு

400 குறியீடு

பொதுவாக, காற்று மாசுக் குறியீட்டில் 400 என்ற அளவுக்கு மேல் அதிகரி்த்தாலே, அது ஆபத்து என்கிறார்கள்.. அதாவது, மனிதர்களின் நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளுக்கு ஆபத்தான விளைவுளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள்.. ஆக மொத்தம், மாசு அதிகரிப்புக்கு பஞ்சாப் மாநிலத்தில் வயல்களில் கழிவுகளை எரிப்பதே பிரதான காரணமாக சொல்லப்பட்டு வருகிறது.. 12 சதவீதம் அதிகரிப்புக்கு பஞ்சாப் முக்கியக் காரணம் என்கிறார்கள்.. காற்றும் சாதகமாக வீசாதாததால் புகை அனைத்தும் டெல்லியை நோக்கி நகர்கிறது.

சீசன்

சீசன்

கடந்த வெள்ளிக்கிழமை முதல் பஞ்சாப்பில் தினசரி 1800க்கும் அதிகமான வயல்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.. இப்படி வயல்களில் எரிப்பது தொடர்பாக கிட்டத்தட்ட 3,634 சம்பவங்கள் நடந்துள்ளனவாம்.. இந்த சீசனில் இதுதான் அதிகமாகும்.. எனினும், வயல்களில் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் மாசின் அளவு 2.5 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. இந்த திடீர் உயர்வால் டெல்லியில் பனிப்பொழிவுகூட கறுமை நிறத்தில் காணப்பட்டு வருகிறது.. முன்னதாக, இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சொன்னதாவது:

 கேஸ் சேம்பர்

கேஸ் சேம்பர்

"காற்று மாசு அளவு அதிகரித்துள்ளதால், டெல்லியில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. இதை கட்டுப்படுத்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.. கடந்த 2021ம் ஆண்டில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் புகைமூட்டம் அதிகரிப்புக்கு பஞ்சாப் முக்கிய காரணமாக உள்ளது.. காரணம், 19 சதவீதம் புகை அதிகரித்துள்ளது.. பஞ்சாப்பில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி, டெல்லியை கேஸ் சேம்பர் போல் ஆக்கிவிட்டது" என்று சற்று காட்டமாகவே கூறியிருந்தார்.

 வைக்கோல்

வைக்கோல்

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடியாக, "வயல்களில் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மத்தியஅரசு விலக வேண்டும்" என்று கூறியிருந்தார்.. எனினும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கோதுமை அறுவடை முடிந்து, விவசாயிகள் வைக்கோலை தீயிட்டு எரித்து வருகிறார்கள்.. இதனால் டெல்லியில் காற்று மாசு அளவு 38 சதவீதம் அதிகரித்து புகைமண்டலம் சூழ்ந்துள்ள நிலையில், வைக்கோலை தீயிட்டு எரிக்கும் பிரச்சனைக்கு கெஜ்ரிவால் அரசு தீர்வு காணும் என்று பஞ்சாப் டெல்லி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.. ஆகமொத்தம், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் அதிகரித்துவரும் புகையால், அரசியலும் சேர்ந்து சூடுபிடித்துள்ளது.

English summary
Stubble Burning: the proportion of stubble burning in delhi air pollution has increased to 38 percentage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X