சன்சத் டிவியில் ‛அந்த’ விளம்பரம்! நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நடுவே ஒரே பரபரப்பு - களேபரம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சன்சத் டிவியில் அரசின் சாதனைகளை ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவத்தால் அரை மணிநேரம் என்ன செய்வது என்பது தெரியாமல் சபாநாயகர் ஓம்பிர்லா தவித்த தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சன்சத் டிவி சேனல் உள்ளது. இது நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபாவில் நடக்கும் விவாதங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இந்த சான்சத் டிவி ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் தான் இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று மதியம் 12 மணி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. மணிப்பூரில் 3 மாதங்களாக நடந்து வரும் வன்முறை பற்றி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதுவும் பேசவில்லை.
இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை பற்றி லோக்சபாவில் பிரதமர் மோடியை பேச வைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி சார்பில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது தான் இன்று விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது இன்று காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் விவாதத்தை தொடங்கினர்.
இந்த வேளையில் அவர், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும், மணிப்பூர் மாநில பாஜக அரசையும் விமர்சனம் செய்தார். அதன்பிறகு பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த வேளையில் சன்சத் சேனலில் மத்திய அரசின் சாதனைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது சான்சத் TV, அரசின் சாதனைகளை ஒளிபரப்பியது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 8, 2023
அதை உடனே நிறுத்தச்சொல்லி அவையில் எதிர்கட்சிகள் போராடினோம்.
எல்லா பட்டன்களும் விஸ்வகுருவிடம் இருப்பதால் சபாநாயகரால் அரை மணி நேரமாக முடிவெடுக்க முடியவில்லை.
ஜனநாயகத்தின் அவமானம். pic.twitter.com/rJFgjWnM70
சன்சத் டிவியில் மத்திய அரசின் சாதனைகளை ஒளிபரப்ப கூடாது என அவர்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுபற்றி மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடியை அவர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி சு வெங்கடேசன், ‛‛நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது சன்சத் டிவி அரசின் சாதனைகளை ஒளிபரப்பியது. அதை உடனே நிறுத்தச்சொல்லி அவையில் எதிர்கட்சிகள் போராடினோம். எல்லா பட்டன்களும் விஸ்வகுருவிடம் இருப்பதால் சபாநாயகரால் அரை மணி நேரமாக முடிவெடுக்க முடியவில்லை. ஜனநாயகத்தின் அவமானம்'' என தெரிவித்துள்ளார். இதில் சு வெங்கடேசன், விஸ்வகுரு என பிரதமர் மோடியை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications