அப்பாவியாக கேட்கிறேன்.. ஆசிய கோப்பையில் கிரிக்கெட் “சூதாட்டமா”? - சுப்ரமணியன் சாமி ட்வீட்டால் பரபர
டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார் என்றும், அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம், கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றதா எனவும் பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்பிக்கை கொடுத்தது இந்தியா.
2 வது லீக் போட்டியில் குட்டி அணியான ஹாங்காங்கிற்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணி வெற்றியை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

இந்திய அணி
சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறின. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. செவ்வாய்கிழமை இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியை தழுவியது.

பாகிஸ்தான் VS ஆப்கானிஸ்தான்
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவதற்கு நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

வெளியேறிய இந்தியா
இதனால் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறியது. கடைசியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. குறிப்பாக விராட் கோலியின் சதம் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்தது. இன்று நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன.

சுப்ரமணியன் சாமி ட்வீட்
இந்திய ஆணி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறதற்கு பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்.பி. சுப்ரமணியன் சாமி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏற்பாட்டாளர்கள் யார்?, அதில் நாம் ஏன் மோசமாக வீழ்த்தப்பட்டோம்? கிரிக்கெட் சூதாட்டமா? அப்பாவியாக கேட்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications