பெகாசஸ்: மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடிக்கு சிக்கல்தான்...எச்சரிக்கிறாராம் சு.சுவாமி
டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்ட விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறு உறுதியானால் பிரதமர் மோடி விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜ்யசபா எம்.பி.யும் பாஜகவை சேர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. பயங்கரவாதிகளின் செல்போன்களை ஹேக்செய்து சதித் திட்டங்களை முறியடிக்க இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது.
ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதால் பல நாடுகளில் பிரளயம் வெடித்தன. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன.

கொந்தளித்த எதிர்க்கட்சிகள்
இதனால் பெகாசஸ் மென்பொருள் மூலமான ஒட்டு கேட்பு விவகாரம் இந்தியாவிலும் பூதாகரமாக வெடித்தது. இது தொடர்பாக மத்திய பாஜக அரசு விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் அதன் கண்காணிப்பிலான விசாரணை கோரி 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றம் அதிரடி
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், வல்லுநர் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக இந்த விசாரணையின் போது கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு மல்லுக்கட்டியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

பிரதமருக்கு எச்சரிக்கை தரும் சு.சுவாமி
இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்திருந்தால் பிரதமர் மோடி அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார். மேலும் தம்முடைய செல்போன்களை ஒட்டுகேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால் எனது இஸ்ரேல் நண்பர்கள் எனக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

சு.சுவாமியின் குடைச்சல்
அத்துடன், பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்பது என கொள்கை முடிவு எடுத்திருந்தால் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்றவர்கள், பிரதமர் மோடியிடம் மேலோட்டமாக ஒப்புதல் பெற்றிருந்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஏற்கனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் நாட்டு மக்களிடம் உண்மையை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தவரும் சுப்பிரமணியன் சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications