புதுவகை கொரோனா தாக்கப்போவது நுரையீரலை விட "மூளையைதானாம்!" விளைவு என்ன தெரியுமா? வெளியான ஆய்வு முடிவு
டெல்லி: சீனாவில் அதிவேகமாக கொரோனா பரவி வரும் நிலையில் அங்கு வேகமான பரவலுக்கு ஒரு காரணமாக பிஏ5 என்ற வகை கொரோனாவின் வேரியண்டும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த வகை கொரோனா வழக்கமான கொரோனா வைரஸ்களை போல சுவாச அமைப்புகளை தாக்காமல் மூளையை தாக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்படுள்ளது.
சீனாவில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு மிகக்கடுமையான பாதிப்பை ஒமிக்ரானில் இருந்து மாறுபாடு அடைந்த புதிய வகை கொரோனாவான பிஎப்7 ஏற்படுத்தியுள்ளது.
ஒருவரிடம் இருந்து 16 பேருக்கு இந்த கொரோனா பரவும் என்பதால், கொரோனா பரவும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சீனா தத்தளித்துவிட்டது.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனால், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்து சீனா தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா போட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. சீனா மட்டும் இன்றி ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகள் பலவும் எடுத்து உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. சீனாவில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனாவால் புதிய வகை திரிபு ஏற்பட்டு மீண்டும் கொரோனா பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கூட மருத்துவ நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது.

புதிய வேரியண்ட் கொரோனா,
இது ஒருபக்கம் இருக்க தற்போது உருமாற்றம் அடைந்து பரவும் புதிய வேரியண்ட் கொரோனா, முந்தைய வேரியண்ட்களை போல சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான சவுத் சீனா போஸ்ட் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் அது தாக்கும் வழியை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மனிதனின் சுவாச அமைப்புகளை தாக்குதவதற்கு பதிலாக மூளையை தாக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மூளையின் திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும்?
கொரோனா மூன்றாவது அலைக்கு காரணமாக இருந்த ஒமிக்ரான் கொரோனா, மேல் சுவாச அமைப்புகளை குறிவைத்து தாக்கியது. டெல்டா வகை கொரோனா நுரையீரல் பகுதியில் தாக்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது ஒமிக்ரானின் மாறுபாடு வகையான பிஏ 5 மூளையின் திசுக்கள் உள்ளிட்டவற்றில் பாதிப்பை ஏற்படுத்துமம் என்றும் ஆய்வு பரிந்துரைத்துள்ளது. மூளையை இந்த பிஏ.5 வகை வேரியண்ட்கள் தாக்குதவன் மூலம் மூளை வீக்கம், எடை இழப்பு மற்றும் மரணம் வரை கூட நிகழலாம் என்று அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிஏ 5 கொரோனாவின் வீரியம் அதிகம்
BA.1- வகை வேரியண்ட் கொரோனாவோடு ஒப்பிடுகையில் இந்த பிஏ 5 கொரோனாவின் வீரியம் அதிகம் என்று ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும் இந்த ஆய்வு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே, இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத என்ற வாதங்கள் நிபுணர்களால் முன்வைக்கப்படாமலும் இல்லை.












Click it and Unblock the Notifications