நேரடியாக களத்தில் குதித்த சுனிதா கெஜ்ரிவால்.. தேர்தல் பரப்புரையில் தீவிரம்! டெல்லியில் இன்று ரோட் ஷோ
டெல்லி: அமலாக்கத்துறையால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரைக்காக நேரடியாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் களமிறங்கியுள்ளார். இன்று டெல்லியில் அவர் ரோட் ஷோவை நடத்துகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல கடந்த 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்து. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை.
ஒருபுறம் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்யாதது அமலாக்கத்துறைக்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பது தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சூழலில், கட்சியை காப்பாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேரடியாக களத்தில் குதித்திருக்கிறார்.
கடந்த மார்ச் 31ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி பொதுக்கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவால் முதல் முறையாக பங்கேற்றிருந்தார். இதற்கு முன்னர் கட்சியின் சில நிகழ்வுகளில் அவர் பங்கேற்றிருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தியுடன் சுனிதா கலந்துரையாடினார். ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த கட்சிகள் அன்று ஒரே மேடையில் இருப்பது பேசு பொருளானது. அதேபோல ராஞ்சியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் சுனிதா பங்கெடுத்திருந்தார். இதில் அவர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனுடன் ஒரே மேடையில் பங்கேற்றிருந்தார்.
இதனையடுத்து இன்று டெல்லியில் பிரமாண்ட ரோட் ஷோவை சுனிதா கெஜ்ரிவால் நடத்துகிறார். இது குறித்து டெல்லி அமைச்சர் அதிஷி கூறுகையில், "எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியை மக்களிடம் கொண்டு சேர்க்க டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சுனிதா கெஜ்ரிவால் தலைமை தாங்கி பிரசாரத்தை நடத்துவார்" என்று கூறியுள்ளார்.
டெல்லியிலும், குஜராத்திலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கிழக்கு டெல்லியில் இன்று ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து சுனிதா கெஜ்ரிவால் பேரணியை நடத்துகிறார் என கட்சி தலைமை அறிவித்திருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications