அப்படி பேசிய வைகோவிடம்.. திடீரென சென்று பாசத்துடன் விசாரித்த பிரதமர் மோடி.. மலைத்துப்போன எம்பிக்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தில் கடுமையாக மத்திய அரசை வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனாலும் யாராலும் எதிர்பார்க்காத வகையில் கூட்டம் முடிந்த பின் நேரில் சென்று வைகோவிடம் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார். இந்த சந்திப்பு அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடந்தது.

இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, இடதுசாரிகள், உள்பட 33 கட்சிகளைச் சேர்ந்த 40 எம்பிக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிரந்து கொண்டனர். திமுக சார்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆபத்தான பாதை

ஆபத்தான பாதை

மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான வைகோ கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும் போது , "இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில் கூட்டாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகிறது மத்திய அரசு" என்று கடுமையாக விமர்சித்தார்.

வைகோவின் நட்பு

வைகோவின் நட்பு

வைகோ பொதுவாகவே மிகவும் உணர்ச்சிவயத்துடன் எந்த விஷயத்திலும் பேசக்கூடியவர். கொள்கை சார்ந்து விமர்சனம் செய்தாலும் அனைத்து கட்சியிலும் நட்பு வட்டம் வைத்திருப்பவர். வைகோவிற்கு வடமாநில எம்பிக்கள் மற்றும் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலரும் நண்பர்கள் ஆவர். என்னதான் விமர்சனங்கள் செய்தாலும், தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி வருகிறார்,

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

அப்படித்தான் பிரதமர் மோடியும் எந்த கட்சியினர் தன்னை விமர்சனம் செய்தாலும், தன்னுடைய அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்தாலும் அதை கண்டு கொதித்து போக மாட்டார். அதேநேரம் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுவார். இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வைகோ பேசியது உண்மையில் மிக கடுமையானது.

நலம் விசாரித்த மோடி

நலம் விசாரித்த மோடி

ஆனாலும் அதைபற்றி பிரதமர் மோடி பொருட்படுத்தாமல், நேராக வைகோவிடம் சென்று பேசினார். வைகோவின் கையைபிடித்து குழுக்கி நலம் விசாரித்தார். திடீரென பிரதமர் மோடி தன்னிடம் நலம் விசாரித்ததால் உணர்ச்சிவயப்பட்டவராக வைகோ காணப்பட்டார். இதை பார்த்துமற்ற எம்பிக்கள் மலைத்துபோயினர். என்னதான் தன்னை விமர்சனம் செய்தராக இருந்தாலும் வைகோவை பிரதமர் மோடி தேடி சென்று நலம் விசாரித்ததை பலரும் பாராட்டுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+