சி.ஏ.ஏவுக்கு எதிரான 200 பொதுநலன் மனுக்கள்- டிச. 6-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: சி.ஏ.ஏ. எனப்படும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான 200க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரணை நடத்துகிறது.
2019-ம் ஆண்டு மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர் அதாவது இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பவுத்தர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி இருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் இந்த சட்ட திருத்தம். இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்கிறது இந்த சட்டம்.
அத்துடன் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் மட்டுமே இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் கூறப்பட்டது.

அஸ்ஸாமில் வெடித்த போராட்டம்
இச்சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாமில் முதலில் போராட்டம் வெடித்தது. வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் பெரும் எண்ணிக்கையில் அஸ்ஸாமில் உள்ளனர். அப்படி சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுத்தால் மண்ணின் மைந்தர்கள், சிறுபான்மையினராகிவிடுவர் என்பதுதான் அச்சம். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. வடகிழக்கு மாநிலங்களில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். டெல்லியிலும் மிக தீவிரமாக சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

குவிந்த பொதுநலன் வழக்குகள்
இச்சட்டத்துக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட பொதுநலன் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் பொதுநலன் வழக்குகளைத் தொடர்ந்தன. ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவியதால் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் இவ்வழக்கு நிலுவையில் இருந்தது.

3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றம்
அண்மையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. பின்னர் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது.

டிசம்பர் 6-க்கு ஒத்திவைப்பு
இன்று தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை தாக்கல் செய்ய 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அஸ்ஸாம், திரிபுரா மாநில அரசுகளும் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications