Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீமா கோரேகான் வழக்கு.. சிறையில் உள்ள கவுதம் நவ்லகாவை வீட்டு சிறைக்கு மாற்ற அனுமதி - உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீமா கோரோகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான கவுதம் நவ்லகாவை வீட்டு சிறையில் வைக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இவர் ஒரு மாதக் காலம் வீட்டு சிறையில் இருப்பார். இக்காலகட்டங்களில் இணையம், மற்றும் கணினியை பயன்படுத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வீட்டு சிறைவாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீமா கோரேகான்

பீமா கோரேகான்

பீமா கோரேகான் வழக்கில் கலவரம் ஏற்பட்ட நிலையில், நக்சல்பாரி அமைப்புடன் தொடர்புடையதாக மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ கடந்த 2020ம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 அன்று கவுதம் நவ்லகா மற்றும் ஆனந்த் டெல்டும்டே என இருவரையும் கைது செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நிலையில் கவுதம் நவ்லகாவின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது.

உடல்நலப் பிரச்னை

உடல்நலப் பிரச்னை

70 வயதான நவ்லகாவிற்கு தோல் பிரச்னையும், பல்லில் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நவ்லகா தரப்பு வழக்கறிஞர், இந்த பிரச்னை புற்றுநோயாக இருக்கக்கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் எனவே 'கொலோனோஸ்கோபிக்கு' நவ்லகாவை உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த பரிசோதனை மேற்கொள்ள அவரை வீட்டு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த மனு நீதிபதிகள் கேஎம் ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

என்ஐஏ எதிர்ப்பு

என்ஐஏ எதிர்ப்பு

ஆனால் மனுதாரரின் கோரிக்கைக்கு என்ஐஏ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர் 'காஷ்மீர்' தீவிரவாதிகள் மற்றும் 'பாகிஸ்தானின் ஐஎஸ்ஐஎஸ்' அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார் என்று தெரிவித்தது. அதேபோல நவ்லகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையின் மீதும் என்ஐஏ கடும் சந்தேகத்தை எழுப்பியிருந்தது. எனவே நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. வேண்டுமெனில் அவர் கடிதங்களை எழுதிக்கொள்ளலாம் என்றும், ஆனால் வீட்டு சிறையில் இருக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறியது.

48 மணி நேரத்தில்

48 மணி நேரத்தில்

ஆனால் புலனாய்வு அமைப்பின் வாதங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஒருவேளை நீதிமன்றம் வீட்டு சிறையை அனுமதித்தால் என்னென்ன நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று புலனாய்வு அமைப்புகளுக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த என்ஐஏ "வீட்டு சிறையில் இருக்கும் காலத்தில் இணையம், மற்றும் கணினியை பயன்படுத்தக்கூடாது" என பல நிபந்தனைகளை வித்தது. இந்நிலையில் நீதிமன்றம் கவுதம் நவ்லகாவுக்கு வீட்டு சிறையில் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்த 48 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு கூறியுள்ளது.

 நிபந்தனைகள்

நிபந்தனைகள்

நிபந்தனைகளை பொறுத்த அளவில், ரூ.2.4 லட்சத்தை நவ்லகா தரப்பினர் டெபாசிட் செய்ய வேண்டும். வீட்டில் மொபைல், இன்டர்நெட், லேப்டாப், மற்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் மொபைல் பயன்படுத்தலாம். அதுவும் காவல்துறை வழங்கும் மொபைல்தான். ஒரு நாளை ஒரு முறை என 10 நிமிடங்கள் மட்டுமே இதனை பயன்படுத்த அனுமதிக்கப்படும். அதேபோல வீட்டு காவலில் இவருக்கு உதவிக்கு ஆள் இருந்தால் அவரிடம் இன்டர்நெட் வசதி இல்லாத மொபைல் மட்டுமே இருக்க வேண்டும். வெறுமென எஸ்எம்எஸ் மற்றும் ஃபோன் பேசும் வசதி மட்டும் இருக்க வேண்டும்.

கேமிரா

கேமிரா

நவ்லகா தங்கும் வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அறைகளை தவிர, வீட்டின் நுழைவு மற்றும், வெளியேறும் பகுதிகளில் கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அதேபோல, வீட்டை சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. காவலர்களுடன் நடை பயிற்சி செல்லலாம். ஆனால் அங்கு யாருடனும் பேசக்கூடாது. அதேபோல நவ்லகாவுக்கு என காவல்துறை வழங்கியுள்ள செல்பொனை தவிர வீட்டில் அவருடன் இருக்கும் நபரின் செல்போனை நவ்லகா பயன்படுத்தக் கூடாது.

3 மணி நேரம்

3 மணி நேரம்

என்ஐஏ நவ்லகாவின் செல்போன் மற்றும், அவருடன் தங்கியுள்ளவரின் செல்போன் அழைப்புகளை கண்காணிக்கும். நவ்லாக மும்பையை விட்டு வெளியேறக்கூடாது. சந்திப்பை பொருத்த அளவில், குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக இரண்டு பேர் வரை வாரத்திற்கு ஒரு முறை வீதம் சந்திக்கலாம். அதுவும் 3 மணி நேரம் மட்டுமே. இவ்வாறு சந்திப்பு மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் யார் அந்த குடும்ப உறுப்பினர்கள் என்கிற விவரத்தை NIA அதிகாரிகளிடம் 3 நாட்களுக்கு முன்னர் வழங்க வேண்டும். இவர்கள் நவ்லகாவை சந்திக்கும்போது எந்த மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.

 அவசர உதவி

அவசர உதவி

வீட்டில் நவ்லகா கேபிள் டிவியை பயன்படுத்தலாம். செய்தித்தாள்களை வாசிக்கலாம். வழக்கு சம்பந்தப்பட்ட எந்த சாட்சியுடனும் தொடர்பு கொள்ள கூடாது. சிறை கையேடு விதிகளின்படி வழக்கறிஞரை சந்திக்க அனுமதி உண்டு. ஆனால் வழக்கறிஞர் விவரத்தை 3 நாட்களுக்கு முன்னர் என்ஐஏ அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+