கோவிலா - மசூதியா? சர்ச்சையான போஜ்ஷாலா வளாகத்தில் இந்து - முஸ்லிம்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்துக்கு இந்துக்களும், இஸ்லாமியர்களும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் போஜ்ஷாலா வளாகத்தில் நாளை ( ஜனவரி 23) ஒரு பகுதியில் சரஸ்வதி பூஜையும், வெள்ளிக்கிழமை தொழுகையையும் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்பது வழிபாட்டு உரிமை தொடர்பான நீண்டகால பிரச்சனைக்கு தற்காலிகத் தீர்வை வழங்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகம் 11ம் நூற்றாண்டை சேர்ந்த நினைவு சின்னமாகும். இந்த வளாகம் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இடம் மதரீதியான சர்ச்சையில் சிக்கியது.

அங்குள்ள இந்துக்கள் போஜ்ஷாலா வளாகத்தை சரஸ்வதி கோவில் என்று கூறி வருகின்றனர். அதே சமயம் இஸ்லாமியர்கள் கமல் மவுலா பள்ளிவாசல் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை தோறும் இந்துக்கள் போஜ்ஷாலா வழிபட அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. கடந்த 23 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. கடந்த 2016ம் ஆண்டில் வசந்த பஞ்சமி வெள்ளிக்கிழமையில் வந்தது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில் தான் ஜனவரி 23ம் தேதி போஜ்ஷாலா வளாகத்தில் சரஸ்வதி பூஜை மேற்கொள்ள அனுமதி கோரி போஜ் உட்சவ் குழுவினர் தொல்லியல் துறையினரை நாடினர். அதேபோல் இஸ்லாமியர்கள் தரப்பில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த மதியம் 1 மணி முதல் 3 மணி வரை அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில் தான் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. அதன்படி நாளை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை மசூதிக்குள் தனியாக ஒரு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழுகை முடித்து அனைவரும் வெளியேறிய பிறகு சரஸ்வதி பூஜை நடத்துவதற்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இருவரின் நிகழ்ச்சிக்கும் தனித்தனி இடம் வழங்க வேண்டும். தனி நுழைவு வாயில் ஏற்படுத்த வேண்டும். அதேபோல் வசந்த பஞ்சமி அன்று பாரம்பரிய சடங்குகளை நடத்துவதற்கு இந்து சமூகத்திற்கும் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்'' என்று நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஏற்பாடுகள் மூலம் இரு சமூகத்தினரும் அமைதியாக வழிபாடு செய்ய வழி பிறக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த வழக்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2 வாரங்களுக்கும் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. இதன்மூலம் விரைவில் இந்த வழக்கில் தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக ஹிந்து முன்னணி சார்பில், ‛‛போஜ்ஷாலா வளாகத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்''என்று கூறி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சமஸ்கிருத கல்வெட்டுகள் மற்றும் இந்து தெய்வங்களின் சிலைகள் உட்பட, ஏற்கனவே இருந்த கோவில் அமைப்புகளுக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கை விவரம் சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது கிடைத்த தகவல்களை இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை உயர்நீதிமன்றம் திறந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வறிக்கை நகல்களை இருதரப்பினருடமும் வழங்க வேண்டும். அதன்பிறகு இருவாரங்களில் ஆட்சேபனைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்கும் வரை சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். , வழக்கு விசாரணை முடியும் வரை எந்தவித புதிய கட்டுமானங்களோ அல்லது மாற்றங்களோ செய்யப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+