கனிமங்கள் மீதான வரியை 2005 ஏப். முதல் மாநில அரசுகள் வசூலிக்கலாம்- உச்சநீதிமன்றம் அதிரடி அனுமதி!
டெல்லி: கனிம வளங்களுக்கு சுரங்க குத்தகைதாரர்கள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து வரி மற்றும் ராயல்டி தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; மத்திய அரசு தரும் ராயல்டி என்பது வேறு; மாநிலங்கள் விதிக்க அதிகாரம் உள்ள வரி என்பது வேறு என அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்த அளியில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பது தொடர்பான வழக்குகளில் 1989-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை அளித்திருந்தது. ஆனால் இந்த இரு தீர்ப்புகளும் முரண்பட்டதாக இருந்தன. 1989-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் vs தமிழ்நாடு வழக்கில் மத்திய அரசு தரும் ராயல்டியும் வரியின் கீழ் வரும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் 2004-ம் ஆண்டு மேற்கு வங்க அரசு vs கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ராயல்டி ஒரு வரி என 1989-ல் உச்சநீதிமன்றம் தவறாக குறிப்பிட்டுவிட்டது; ராயல்டி மீதான செஸ்வரி என திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனிடையே கனிம வளங்களுக்கு வரி, ராயல்டி வசூலிக்க உரிமை இல்லை என கோரி உச்சநீதிமன்றத்தில் கனிம வள சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. 2011-ல் இதனை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு; கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெறுகிற ராயல்டி தொகையை வரியாக கருத முடியாது; கனிம வளம் உள்ள நிலத்தின் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்குதான் உண்டு. நிலம் என குறிப்பிட்டாலே கனிம வளம் உள்ள நிலத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என 9 நீதிபதிகளில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர். இதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பு வாதத்தை நிராகரித்து, கனிம வளங்களுக்கு சுரங்க குத்தகைதாரர்கள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் வரி மற்றும் ராயல்டி தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications