Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்று பில்கிஸ் பானோ.. நாளை நாங்களாகக் கூட இருக்கலாம்.." சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பில்கிஸ் பானோ பாலியல் பலாத்கார குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் 2002இல் கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின், மிகப் பெரிய வன்முறையும் கலவரமும் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், பல கொடூரங்கள் அரங்கேறின.

Supreme Court asks Gujarat govt in Bilkis Bano Case

பெண்கள் பலரும் மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். அப்படி குஜராத் கலவரத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம் தான் பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம். அகமதாபாத் ரன்திக்பூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பில்கிஸ் பானுவின் குடும்பத்தை இதில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர்.

பில்கிஸ் பானோ: அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ, கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் சிறு குழந்தை அடித்தே கொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் அப்போதே நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த அவர்களை சில மாதங்களுக்கு முன்பு, அம்மாநில அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இது நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பில்கிஸ் பானோ பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக மார்ச் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம், தண்டனைக் குறைப்புக்கான கோப்புகளை சமர்ப்பிக்குமாறு குஜராத் அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது.

நீதிபதிகள் கருத்து: மேலும், நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்தது குறித்தும் கேள்வி எழுப்பினர். மேலும், குற்றத்தின் தீவிரத்தை அரசு பரிசீலித்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சுப்ரீம் கோர்ட் கூறுகையில், "கர்ப்பிணிப் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இதைச் சராசரியான கொலை வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. எப்படி ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாததோ.. அதேபோல படுகொலை சம்பவங்களைச் சாதாரண கொலை சம்பவங்களுடன் ஒப்பிட முடியாது. குற்றம் செய்பவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்கள். அனைத்து குற்றவாளிகளையும் சமமாகக் கருத முடியாது.

இன்று அவர், நாளை யார்: அரசு தனது மனசாட்சியைக் கடைப்பிடித்ததா.. என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இன்று அது பில்கிஸ், ஆனால் நாளை அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.. அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். எந்த அடிப்படையில் நிவாரணம் வழங்கினார்கள் என்பதை நீங்கள் காட்டவில்லை என்றால், நாங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும்" என்றனர்.

அனைத்து குற்றவாளிகளும் பதிலளிக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக மார்ச் 27ஆம் தேதி விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கைக் கொடூரமான என்று குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கும் போது, அவர்கள் செய்த குற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதா என்று குஜராத் அரசிடம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+