உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்று பணி ஓய்வு.. வழங்கிய 5 முக்கிய தீர்ப்புகள் லிஸ்ட்
டெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் தனது பதவியில் இருந்து பணி ஓய்வு பெறுகிறார். வரும் நவம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அவர் ஓய்வு பெறவுள்ளதால் இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது கடைசி நாள் விசாரணையை மேற்கொள்ளவுள்ளார். நீதிபதி பி.ஆா்.கவாய் ஓய்வு பெறுவதைத் தொடா்ந்து, 53 ஆவது இந்திய தலைமை நீதிபதியாக நீதிபதி சூா்யகாந்த் பதவியேற்க உள்ளாா்.
உச்சநீதிமன்றத்தின 52 ஆவது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆா்.கவாய் கடந்த மே 14 ஆம் தேதி பதவி ஏற்றார். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். வரும் திங்கள்கிழமை பிஆர் கவாய்க்கு 65 வயதாகும் நிலையில், அலுவல் நாளான இன்றுடன் பணி ஓய்வு பெறவுள்ளார். இவர் பல்வேறு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

பி.ஆர்.கவாய் நாக்பூர் அமர்வில் அரசு வழக்கறிஞராக 200 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். 2003, நவம்பர் 14 ஆம் தேதி மும்பை ஹைகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வுபெற்றார். அதைத்தொடர்ந்து, 2005, நவம்பர் 12 ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். 2019 இல் மே 24 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வுபெற்றார்.
52 வது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் கடந்த மே 14 ஆம் தேதி பதவியேற்றார். பல்வேறு வழக்குகளை கையாண்ட சுமாா் 700 அமா்வுகளில் பிஆர்.கவாய் அதன் ஒரு பகுதியாக இருந்துள்ளாா். அடிப்படை உரிமைகள், மனித உரிமை, சட்ட உரிமை உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகள் என சுமார் 300 தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
நீதிபதி பி.ஆா்.கவாய் வழங்கிய முக்கிய தீா்ப்புகள் விவரம்:
1. பண மதிப்பிழப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வில் நீதிபதி பிஆர்.கவாய் ஒரு பகுதியாக இருந்தாா்.
2. SC, ST இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை அனுமதித்து 2024 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வில் நீதிபதி பி.ஆா்.கவாய் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீா்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அமா்வில் கவாயும் ஒரு பகுதியாக இருந்தார்.
4. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் நீதித்துறை காலக்கெடு நிா்ணயிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமா்வு இதற்கு தீர்ப்பு வழங்கியது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications