Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவை கலங்க வைத்த பாலியல் வழக்கு! பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகாவில் பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் தர உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் 'சக்தி வாய்ந்த நபரான ரேவண்ணா' என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா ஹாசன் மாவட்ட ஹலெநரசிப்புரா எம்எல்ஏவாக இருக்கிறார். இவரது மகனான பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சி எம்பியாக இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் ஜேடிஎஸ் கூட்டணி வைத்த நிலையில் மீண்டும் ஹாசன் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

prajwal revanna supreme court national

கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி அந்தத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்தார். அதற்கு முன்னதாக பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் பரவியது.

பிரஜ்வல் ரேவண்ணா தங்கள் கட்சி பெண் நிர்வாகிகள், உதவி கேட்டு வரும் பெண்கள், மனு அளிக்க வரும் பெண்கள், அரசு அதிகாரிகள் என 300-க்கும் மேற்பட்டோரை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்ததும், மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை காட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவரது பென் ட்ரைவில் சுமார் 2900க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களின் வீடியோக்கள் திடீரென வெளியானது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தேர்தலிலும் தோல்வி அடைந்தார். இதனையடுத்து ஜெர்மனியிலிருந்து வியாழக்கிழமை கர்நாடகா திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கேம்பேகௌட சர்வதேச விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த மாதம் 2 குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. பிரிஜ்வல் ரேவண்ணா மீது ஐந்து பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2144 பக்கம் கொண்ட இரண்டு குற்றப் பத்திரிகைகள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்தார். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா செய்த செயல்கள் சமூகத்தில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ரேவண்ணா மனு தாக்கல் செய்தார் இந்த மனு, நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆக்யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் வெளிநாட்டில் இருந்தபோது குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது.. இந்தியா திரும்பியதும் சரணடைந்திருக்கிறேன். குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. முன்பு எம்பியாக இருந்தேன் தேர்தலிலும் போட்டியிட்டேன். ஆனால் இந்த குற்றச்சாட்டால் அனைத்தையும் இழந்து இருக்கிறேன் என பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது 'நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபர்' என குறிப்பிட்ட நீதிபதிகள், ஜாமீன் வழங்க மறுத்ததோடு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+