வெறுப்பு பேச்சு வழக்கு.. அண்ணாமலைக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த ஹேப்பி நியூஸ்- விசாரணை தடை நீட்டிப்பு!
டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வெறுப்பு பேச்சு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், இந்து மத பண்டிகையான தீபாவளியை அழிக்கவே பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்படுகிறது என கூறியிருந்தார். அத்துடன் நிற்காமல், தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க கோரி கிறிஸ்தவ மிஷனரிகளின் தூண்டுதலிலேயே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூஷ் மனுஷ் கோரியிருந்தார். இவ்வழக்கில் அண்ணாமலை ஆஜராக சேலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால் இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார். அதில், என் பேட்டியால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என் பேச்சின் உள்ளடக்கம் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் சேலம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அண்ணாமலையின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலையின் பேச்சையும் கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது 6 வாரங்களில் புகார் மனுதாரர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் செப்டம்பர் 9-ந் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கான இடைக்கால தடை தொடரும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications