'இது கூட உங்கள் பணம் அல்ல'.. சுகேஷ் மனைவிக்கு அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனாவிற்கு 50000 ரூபாய் அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் எல்லா நேரமும் வருவதை அனுமதிக்க முடியாது என்றும், நீங்கள் மனு தாக்கல் செய்ய பயன்படுத்தும் பணம் கூட உங்கள் பணம் அல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்தது, ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் உள்ள தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங் ஜாமீன் வாங்கி தருவதாக சிறையிலேயே நட்பாக பேசி, அவரின் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த வழக்கிலும் சுகேஷ் சிறையில் உள்ளார்.

supreme court sukesh chandrasekhar

இதனிடையே பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியாவும் சிறையில் உள்ளார். சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பவுலோஸ் மற்றும் பலர் கடந்த ஆண்டில் இருந்தே நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் கடந்த ஜூலை மாதம் டெல்லி உயநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் இவரது ஜாமீன் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் லீனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதபற்றி கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போதே இவ்வாறு மனு தாக்கல் செய்தது தவறான விஷயம் என்றனர்.

அப்போது லீனா மரியா பாலோஸின் வழக்கறிஞர், "தவறான புரிதலுடன்" மனு தாக்கல் செய்துவிட்டோம். எனவே மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் தயவுசெய்து அபராதம் விதிக்க வேண்டாம். இது விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்றும் லீனா மரியாவின் வழக்கறிஞர் கெஞ்சினார். அப்போது பதில் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி திரிவேதி, "அது தடைபடட்டும்" உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் எல்லா நேரமும் நீங்கள் வந்து கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.

தொடர்ந்து நீதிபதி சர்மா கூறும் போது, இது போன்ற நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் மனுக்கள் மீது அபராதங்கள் விதித்தால் தான் அது சரியானதாக இருக்கும் எனக் கூறினார். மேலும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் நீங்கள் மனு தாக்கல் செய்ய பயன்படுத்தும் பணம் கூட உங்கள் பணம் அல்ல என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+