அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
டெல்லி: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2011 -15-ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. பின்னர் திமுகவில் இணைந்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மீது ஓட்டுநர், நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் மொத்தம் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம்
இந்நிலையில் பண மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறை சம்மன் ரத்து
அமலாக்கத்துறையின் இந்த சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ராஜா விசாரித்தார். இந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் ஏற்கனவே விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதேநேரத்தில் அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகையால் அமலாக்கப் பிரிவின் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ராஜா, செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கப் பிரிவின் சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ்
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, பண மோசடியால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான திருவண்ணாமலை பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இதனை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. இதையடுத்து திருவண்ணாமலை பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க செந்தில் பாலாஜிக்கும் அமலாக்கத்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications