ஓயாத வன்முறை: மணிப்பூர் செல்லும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.. பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு!
டெல்லி: மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சுந்தரேஷ், சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன், விக்ரம்நாத், கோடீஸ்வர் சிங் ஆகிய 6 பேர் குழுவினர் மணிப்பூர் செல்கின்றனர்.
அப்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாக உறுதி அளிக்க உள்ளனர்.

மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மெய்த்தி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இரு தரப்பினரும் மாற்று இனத்தவரின் குடியிருப்புகளில் தீ வைத்து எரிக்கும் சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில் பலர் பலியாகினர். இதனால் மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இதனிடையே மணிப்பூர் முதலமைச்சராக இருந்து வந்த பிரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மணிப்பூர் கலவரத்திற்கு பிரேன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், அவர் முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக அழுத்தம் அதிகரித்ததால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பி.ஆர்.கவாய் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் வருகிற 22 ஆம் தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவையொட்டி உச்ச நீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வரும் 22 ஆம் தேதி மணிப்பூருக்கு செல்கிறார்கள்.
இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள். நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications