உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா.. யார் இவர்?
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக இன்று சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுக்கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில், சஞ்சீவ் கண்ணாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை டி ஒய் சந்திரசூட் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, சஞ்சீவ் கண்ணாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காலை 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் 51வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை இருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சஞ்சீவ் கண்ணா டெல்லியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1985 ஆம் ஆண்டு நீதிபதியாக இருந்தவர். இவரது தாயார் சரோஜ் கண்ணா, இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணி செய்தார். சஞ்சீவ் கண்ணா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.

கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். நீண்ட காலம் வழக்கறிஞராக பணியாற்றிய சஞ்சீவ் கண்னா, கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், தான் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். வேறு எந்த ஒரு நீதிமன்றத்திலும் சஞ்சீவ் கண்ணா தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கவில்லை. இதற்கு முன்பு ஒரு சில நீதிபதிகளே இப்படி வேறு எந்த நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்காமல் நேரடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருக்கிறார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications