ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஹேமந்த் சோரன் ஜாமீன் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவுகளைத்தான் பிறப்பித்துள்ளது என கூறி அமலாக்கத்துறையின் மனுவை டிஸ்மிஸ் செய்தது உச்சநீதிமன்றம்.
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வின் செயல் தலைவர். ஹேமந்த் சோரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் அமலாக்கத்துறையும் இணைந்து ஹேமந்த் சோரன் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் சாம்பாய் சோரன் இடைக்கால முதல்வரானார்.

இதனிடையே ஹேமந்த் சோரன் தமக்கு ஜாமீன் வழங்கக் கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ஹேமந்த் சோரன் மீதான வழக்குக்கு முகாந்திரமே இல்லை என கூறி அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.
இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். ஜார்க்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்தார். ஆனால் அமலாக்கத்துறையோ ஹேமந்த் சோரனின் ஜாமீன் விடுதலையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை இன்று விசாரித்தது உச்சநீதிமன்றம். அப்போது ஹேமந்த் சோரன் வழக்கில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் சரியான உத்தரவையே பிறப்பித்துள்ளது என கூறி அமலாக்கத்துறையின் மனுவை டிஸ்மிஸ் செய்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். ஹேமந்த் சோரன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு இது பெரும் பின்னடைவாகும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications