5 ஸ்டார் விடுதிகளில் இருந்துவிட்டு..காற்று மாசுக்கு விவசாயிகளை குறை சொல்கிறீர்கள்.. நீதிபதிகள் சாடல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 5 ஸ்டார் விடுதிகளில் ஏசி அறைகளில் தங்குபவர்கள் தான் காற்று மாசுக்கு விவசாயிகள் காரணம் என குற்றஞ்சாட்டுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
தலைநகர் டெல்லி கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் பெரியளவில் பலன் தருவதாக இல்லை.
இந்த காற்று மாசால் டெல்லிவாசிகள் மிக மோசமான பிரச்சினைகள் எதிர்கொண்டு வருகின்றன. டெல்லியில் ஒரு நாள் இருப்பது கிட்டதட்ட பல சிக்ரெட்டுகளை குடிப்பதற்குச் சமம் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்,

10% காரணம்
முதலில் இந்த காற்று மாசுக்குப் பஞ்சாப், ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதே முக்கிய காரணம் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் நேற்று முன்தினம் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, விவசாய கழிவுகளை எரிப்பது டெல்லியில் வெறும் 10% காற்று மாசுக்கு மட்டுமே காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

தவறாக வழிநடத்தும் மத்திய அரசு
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், விவசாய கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கு முக்கிய காரணம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இதை மத்திய அரசு வழக்கறிஞரும் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி, டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகளை எரிப்பது 35% காரணம் என முதலில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மத்திய அரசு தான் என்றும் சில காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டியது.

அரசு தரப்பு வழக்கறிஞர்
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை தொடங்கியதும் தனது வாதத்தைத் தொடங்கிய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "விவசாய கழிவுகளை எரிப்பதால் 4-7 சதவிகிதம் மட்டுமே காற்று மாசு ஏற்படுவதாகக் கூறி நான் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தினேன் என்று என்னைப் பற்றி ஊடகங்களில் பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு டெல்லி காற்று மாசில் விவசாய கழிவுகளை எரிப்பது சற்று அதிகமாகவே காரணமாக உள்ளது என நாங்கள் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளோம். நான் குறிப்பிட்ட தகவல் ஆண்டு முழுவதுக்குமான தகவல் இல்லை"என்றார்

விவசாயிகளைத் தண்டிக்கக் கூடாது
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, "இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கைத் திசை திருப்ப முயலாத வரை இதுபோன்ற புள்ளிவிவரங்கள் எங்களுக்கு முக்கியமில்லை. மாசை குறைப்பதே எங்களுக்கு முன்னுரிமை. பொதுவாழ்க்கையில் இருக்கும் போது இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்வது சகஜம் தான். மனசாட்சிப்படி சரியாக நடந்துகொண்டால் இதெல்லாம் பிரச்சினை இல்லை. விவசாயிகளைத் தண்டிக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு இல்லை. இருப்பினும், காற்று மாசை கருத்தில் கொண்டு அவர்கள் விவசாய கழிவுகளை எரிப்பதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது விவசாய கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும்" என்றார்.

5 நட்சத்திர ஹோட்டல்கள்
மாற்று வழிகளைக் கண்டறிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தேவை என்று வலியுறுத்திய நீதிபதி சூர்ய காந்த், "விவசாயிகளின் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். விவசாய கழிவுகளை எரிக்க வேண்டும் என அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தம்? அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. டெல்லியில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் இருப்பவர்கள் விவசாயிகளைக் குற்றம் சாட்டுகிறார்கள். விவசாயிகளுக்குத் தேவையான இயந்திரங்களை ஏன் இவர்கள் வழங்கக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார்.

பெரிய பிரச்சினை தான்
கடைசியாக வாதாடிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங், "காற்று மாசு என்றும் முடியாத சிக்கலாக உருவெடுத்துள்ளது. விவசாய கழிவுகளை எரிப்பது டெல்லி காற்று மாசுக்கு 50% வரை காரணமாக இருக்கலாம். நான் விவசாயிகளைக் குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், விவசாய கழிவுகளை எரிப்பது மிகப் பெரிய பிரச்சினை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசைச் சாடிய நீதிபதிகள்
அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி ரமானா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், "இந்திய அரசின் அதிகாரத்துவம் செயலற்ற தன்மை வளர்த்திருப்பதை நான் கவனித்தேன். அவர்கள் எல்லாவற்றையும், தண்ணீர் தெளிப்பது முதல் தீயை அணைப்பது வரை அனைத்தையும் நீதிமன்றத்தால் செய்ய விரும்புகிறார்கள். ஏற்கனவே கூட்டுக் குழுவைக் கூட்ட உத்தரவிட்டிருந்தோம். அதுவே இன்னும் நடக்கவில்லை" என்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக உள்ளதால் அங்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நொய்டா போன்ற அண்டை நகரங்களில் உள்ளவர்கள் வீடுகளிலிருந்தே பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications