சாட்சி சொல்ல வயசு எதுக்கு? அறிவு இருந்தா போதும்.. 7 வயது சிறுமியின் சாட்சியத்தை ஏற்ற உச்சநீதிமன்றம்!
டெல்லி: தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து உடலை ரகசியமாக தகனம் செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியமளிக்க குறைந்தபட்ச வயது என எதுவும் சாட்சியமளிக்கும் சட்டத்தில் இல்லை என்பதால் குழந்தையின் சாட்சியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கேள்விகளைப் புரிந்து கொண்டு பகுத்தறிவுடன் பதிலளிக்கும் குழந்தைகளும் சாட்சியம் அளிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை 7 வயது மகளின் கண் முன்னே கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து அவரது உடலை ரகசியமாக எரித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் 7 வயது சிறுமி சாட்சியமாக சேர்க்கப்பட்டிருந்தார். இதில் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
குழந்தையின் சாட்சி நம்பகத் தன்மையற்றது எனவும் அவரை போலீசார் அவ்வாறு பேச வைத்திருக்கலாம் என வாதிடப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த நிலையில் இது தொடர்பாக அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஜேபி பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளி தரப்பில் சிறுவயது குழந்தைகளின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், போலீசார் அவர்களை பயிற்சி அளித்து பேச வைத்திருக்கிறார்கள் எனவும் வாதிடப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் சாட்சியமளிக்க குறைந்தபட்ச வயது என்று எதுவும் சட்டத்தில் இடம் இல்லை என கூறியதோடு அந்த நபரை குற்றவாளி என ஆயுள் தண்டனை விதித்தது. இது தொடர்பாக அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள்," ஒரு குழந்தை சாட்சியமளிக்கும் தகுதி உடையதா என கண்டறியப்படும் வரை அனைத்து நோக்கங்களுக்காகவும் ஒரு குழந்தையின் சாட்சியம் மற்ற சாட்சிகளைப் போலவே கருதப்படும்.
அதே நேரத்தில் ஒரு குழந்தையின் சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதற்கு முன்பதாக முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். குழந்தைக்கு பயிற்சி அளித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அந்த சாட்சி நம்பகமான சாட்சியாக இருக்க வேண்டும் என்பதும் அவசியம். இந்த நிலையில் இந்த வழக்கில் குழந்தையின் சாட்சியத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அதே நேரத்தில் அதனை மிகுந்த கவனத்துடன் மதிப்பட வேண்டியது அவசியம்.
ஒரு சாட்சிக்கு குறைந்தபட்ச வயது என எதையும் இந்திய சாட்சிய சட்டம் பரிந்துரைக்கவில்லை. சிறுவயது குழந்தை என்றாலும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தை என்றாலும் அவர்களது சாட்சியங்களை முழுமையாக நிராகரிக்க முடியாது. சாட்சிய சட்டம் பிரிவு 118 படி குழந்தை சாட்சியங்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு அவர்களது பகுத்தறிவை சோதிப்பது அவசியம். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அதன் பதில்கள் ஆராயப்பட வேண்டும்.
கேள்விகளின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் விசாரணை நீதிமன்றங்களை ஒரு ஆரம்ப பரிசோதனை செய்ய வேண்டும் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் மரணம் குறித்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை. அவரது உடலையும் ரகசியமாக தகனம் செய்திருக்கிறார். சந்தேகத்தின் பேரில் விசாரணை அதிகாரிகள் அந்த பகுதிக்கு செல்வதற்கு முன்பதாகவே உயிரிழந்தவரின் உடல் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது .
ஏழு வயதுடைய தனது மகளை குற்றவாளி வீட்டில் தனியாக விட்டு விட்டு ஓடியதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை சாட்சியங்களை பதிவு செய்யும்போது சாட்சியின் சாட்சியமளிக்கும் திறனை மதிப்பிடுவதும். அவர் பொய்சாட்சியாக தயார் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வது விசாரணை நீதிமன்றங்களில் அடிப்படை கடமை என குறிப்பிட்டது.
ஏற்கனவே இது போன்ற வழக்குகளில் குழந்தைகளின் சாட்சி நிராகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கீழமை நீதிமன்றங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications