"டிராபிக் மோசமாக இருக்கும்போது.. மக்கள் ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.." உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: இப்போது தேசிய நெடுஞ்சாலைகளின் தரம் எந்தளவுக்கு மோசமாக இருந்தாலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே ஒரு சாலையைக் கடக்க 12 மணி நேரம் ஆகும் போது.. சாலை அந்தளவுக்கு மோசமாக இருக்கும் போது மக்கள் ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நமது நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சுங்கக் கட்டணம் தான் பெரிய தொல்லையாக இருக்கிறது. சாலை மோசமாக இருந்தாலும் கூட கண்டிப்பாகச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. மக்கள் பலரும் மோசமான சாலைக்குச் சுங்கக் கட்டணம் ஏன் செலுத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

மேல்முறையீடு
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 12 மணி நேரம் டிராபிக் நெரிசல் இருக்கும்போது பயணிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது ஏன் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்தது..அதாவது தேசிய நெடுஞ்சாலை 544ல் மண்ணுத்தி- எடப்பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும். அங்குச் சாலையும் மிக மோசமான தரத்தில் இருக்கிறது. இதனால் அந்தச் சாலைக்கு திருச்சூர் மாவட்டம் பாலியேக்கராவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றம்
இந்த உத்தரவுக்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, நீதிபதி சந்திரன் NH 544 சாலையில் ஏற்பட்ட 12 மணி நேர போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பினார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆஜரான இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இது கடவுளின் செயல், ஒரு லாரி கவிழ்ந்தது.. அதனால் ஏற்பட்ட டிராபிக் நெரிசலே இதற்குக் காரணம்" என்று பதிலளித்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதி சந்திரன், "லாரி தானாகக் கவிழவில்லை, அது ஒரு குண்டும் குழியுமான சாலை. இதன் காரணமாகவே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது" என்று கூறியிருக்கிறார்.
மத்திய அரசு வாதம்
அதற்கு துஷார் மேத்தா, "சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அங்கு மக்கள் வசதிக்காக சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பருவமழை இந்தப் பணிகளைப் பாதித்துள்ளது" என்றார். மேலும், சுங்கக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்வதற்குப் பதிலாக, அதைக் குறைத்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்கு முன்பே இதுபோல குறைத்து வசூலிக்க அனுமதித்து நீதிமன்றத் தீர்ப்பு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அதை ஏற்க மறுத்த நீதிபதி சந்திரன், "12 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தச் சாலையில் பயணித்த மக்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்க வேண்டும்.. டிராபிக் நெரிசல் இல்லையென்றால், இந்தத் தூரத்தைக் கடக்க அதிகபட்சமாகவே ஒரு மணி நேரம் தான் ஆகும். டிராபிக் ஓரளவுக்கு இருந்தாலும் 3 மணி நேரம் தான் ஆகும். 12 மணி நேரம் என்பது ரொம்பவே அதிகம்.. எனவே சுங்க கட்டணத்தைக் குறைத்து வசூலிக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று நீதிபதி சந்திரன் விளக்கினார்.
எதற்காகச் சுங்கக் கட்டணம்?
அப்போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாயும் கிட்டத்தட்ட இதே கருத்தை முன்வைத்தார். ஒரு சாலையை 12 மணி நேரம் ஆகும் போது, ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். அவர் மேலும், "ஒரு மணி நேரத்தில் பயணிக்க வேண்டிய தூரத்திற்கு 11 மணி நேரம் கூடுதலாக ஆகிறது, அதற்கும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
ஆயினும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். இருப்பினும், மோசமான சாலைக்கு ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications