ராஜீவ் கொலை வழக்கு- பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக ஆளுநர், மத்திய அரசை வெளுத்து எடுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணையின் ஆளுநர், மத்திய அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்து சாடினர்.
உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதம்: பேரறிவாளன் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் கூறியதாவது: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முதலில் ஆளுநர் தரப்பில், சிபிஐயின் பல்நோக்கு விசாரணை குழு அறிக்கை கிடைக்கவில்லை. அதனால் தான் முடிவெடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம், இந்த வழக்கில் ஆளுநர் முடிவு எடுப்பதற்கும் எங்களது பல்நோக்கு விசாரணை குழுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றது சிபிஐ. இப்படி சொன்ன பின்னரும் கூட பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த ஒரு முடிவெடுக்காமல் இழுத்தடித்தார். ஒரு கட்டத்தில் இவ்விவகாரத்தில் தாம் முடிவு எடுக்க அதிகாரம் கிடையாது; ஜனாதிபதியே முடிவு எடுப்பார் எனவும் ஆளுநர் தரப்பு தெரிவித்தது. இவ்வாறு கோபால் சங்கர நாராயணன் வாதிட்டார்.
Recommended Video

விடுதலை செய்யலாமே?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: பேரறிவாளனை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற குழப்பத்தின் நடுவில் ஏன் சிக்க வேண்டும் ? 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைநில் உள்ளவரை விடுதலை செய்து இந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக்கூடாது? பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு தரப்புவாதிட வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

மத்திய அரசின் வரம்பு மீறல்
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவேதி வாதிடுகையில், இந்த வழக்கு என்பது மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்திருந்தாலும் தற்போதைய நிலையில் அந்த அதிகார வரம்பு எங்கு உள்ளது என்பதையே பார்க்க வேண்டும். அந்த வகையில் ஆளுநர் தனக்கான அதிகாரம் 161ன் கீழ் முடிவெடுக்கலாம். இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் கொலைக்குற்றத்துக்கு சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுவிக்க தங்களுக்கே அதிகாரம் உள்ளது என்று இந்த வழக்கில் கூறுவது வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பை மீறிய செயல் ஆகும். ஒரு சிறைக்கைதியை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் தலையிடுகிறது என்றார். ஆனால் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கின் தன்மையே வேறு, மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்கு என்ப்பதால் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என வாதிட்டார்.

ஆளுநர் மீது கடும் சாடல்
ஆனால் நீதிபதிகளோ, ஆளுநர், ஜனாதிபதி ஆகியோரது அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட கூடாது ? பேரறிவாளனை விடுதலை செய்து இந்த வழக்கை ஏன் முடித்து வைக்கக்கூடாது ? என மீண்டும் கேள்வியெழுப்பினர். அத்துடன் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு 161ன் கீழ் அதிகாரம் உள்ளது. பல ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்து வரும் ஏன் பேரறிவாளனுக்கு இந்த நீதிமன்றமே ஏன் நிவாரணம் வழங்கக்கூடாது ? ஒவ்வொரு விவகாரத்திலும் அமைச்சரவை தீர்மானம், அல்லது முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் ஒவ்வொரு முறையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது நமது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது; மோசமான முன்னுதாரணம் என்றனர்.

மாநில அரசுக்கே அதிகாரம்
மேலும் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்பது தொடர்பாக வேறு வழக்குகளில் ஏற்கனவே அரசியல் சாசன பெஞ்ச் தெளிவுபடுத்தி விட்டது. எனவே இந்த விவகாரத்தில் தயவுசெய்து ஆளுநரை கொண்டு வராதீர்கள். மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தான், அமைச்சரவை முடிவு தொடர்பாக அவர் தனித்த கண்ணோட்டத்தோடு, தன் தனிப்பட்ட கருத்துகளை கொண்டு செயல்பட முடியாது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாக இருக்கிறது, இதனால் பலமுறை வழக்கை தேவையே இல்லாமல் ஒத்தி வைக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications