பதஞ்சலி விவகாரம்.. கையெடுத்து கும்பிட்ட அரசு அதிகாரி! உத்தரகாண்ட் அரசு மீது உச்சநீதிமன்றம் பாய்ச்சல்
டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அறிவியலுக்கு புறம்பாக விளம்பரம் செய்த விவகாரத்தில், உத்தரகாண்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது, அம்மாநில மருந்து தர நிர்ணய அதிகாரிகள் தங்களது கடந்த காலங்களில் என்னென்ன விவகாரங்களை கையாண்டார்கள் அதில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்கிற விவரங்களையும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
பிரபல யோக குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை கொண்ட விளம்பரங்களை செய்வதாகவும் சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் பதஞ்சலி நிறுவனத்திற்கும், பாபா ராம்தேவுக்கும் ஏற்கெனவே பல முறை வார்னிங் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
மறுபுறம், உத்தரகாண்ட் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பதஞ்சலியின் தலைமையகம் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் இருக்கிறது. எனவே அம்மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இணை இயக்குநர் டாக்டர் மிதிலேஷ் குமார் ஆஜராகியிருந்தார்.
அவர்களிடம், "பதஞ்சலி நிறுவனத்திற்கு நீங்கள் இணங்கி சென்றிருக்கிறீர்கள் என ஏன் நினைக்க கூடாது? நாங்கள் ஏன் அனைத்து அதிகாரிகளையும் இப்போதே சஸ்பெண்ட் செய்யக் கூடாது? மருந்து மற்றும் உரிமம் வழங்கும் அதிகாரிகளின் வேலை என்ன என்பது தெரியுமா? உங்கள் அதிகாரிகள் எதையும் செய்யவில்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள போவதில்லை" என்று நீதிபதிகள் காட்டமாக கூறினர்.
அதேபோல, உத்தரகாண்ட் மாநிலத்தின் மருந்துகள் தர நிர்ணய அதிகாரிகள் மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருந்துகள் சார்ந்த அரசுகளின் துறை அதிகாரிகள் தங்களது கடந்த காலங்களில் என்னென்ன விவகாரங்களை கையாண்டார்கள் அதில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தவறான விளம்பரம் தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரகாண்ட் அரசின் மருந்து உரிமம் வழங்கும் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால், இந்த கடிதத்திற்கு பிறகு வெறுமென ஆணையம், பதஞ்சலிக்கு வார்னிங் மட்டுமே கொடுத்திருந்தது. இதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "நீங்க சட்டத்தைப் படிச்சீங்களா? ஒரு எச்சரிக்கை போதும்னு நினைக்கிறீங்களா? இந்தச் சட்டத்துல என்ன விதி இருக்கு? என்ன கேஸ் போட்டீங்க? என்ன நடவடிக்கை எடுத்தீங்க? நீங்கள் பொதுமக்கள் உடல் நலத்துடன் விளையாடுகிறீர்கள்" என காட்டமாக கேள்வி எழுப்பினர்.
தொடர் கேள்விகளால் ஆடிப்போன டாக்டர் மிதிலேஷ் குமார், இரு கரங்களையும் கூப்பி என்னை தயவு செய்து விட்டுவிடுங்கள். நான் இயக்குநராக வந்தது கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான். இந்த சம்பவம் அதற்கு முன்னரே நடந்தது" என்று கூறினார். ஆனாலும் நீதிமன்றம் தொடர் கேள்விகளை அடுக்கியது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications