Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனாதனிகளை இனப்படுகொலை செய்ய தமிழக அரசே அழைப்பு என வாதம்- உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற பேச்சுக்காக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட மொத்தம் 4 வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செப்டம்பர் 2-ந் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு- மலேரியா- காலரா போல சனானத தர்மம் என்பதை ஒழிப்போம் என்றார். ஆனால் பாஜகவினரோ, சனாதனிகளை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பொய்யான வதந்திகளைக் கிளப்பிவிட்டனர். இதனை பிரதமர் மோடி உள்ளிட்டோரும் நம்பி தொடர்ந்து உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Supreme Court tags Plea Seeking FIR against Udhayanidhi Stalin on Sanatana Dharma Row

இதேபோல சனாதன தர்மம் என்பது எய்ட்ஸ் நோய் போல; உலக சமூகத்துக்கே பெரும் அச்சுறுத்தலானது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி பேசினார். இதற்கும் வழக்கம் போல கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வினித் ஜிண்டல் தாக்கல் செய்த சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பான உதயநிதிக்கு எதிரான வழக்கு இன்று நீதிபதிகள் அனிருதா போஸ், பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.

நாடு முழுவதும் 40 வழக்குகள்: தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் திவாரி ஆஜரானார். அப்போது, இந்தியா முழுவதும் இது போல 40 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஏற்கனவே இதே உச்சநீதிமன்றத்திலும் ஒரு வழக்கு தொடரப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் வினித் ஜிண்டல் வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார் ஆனந்த் திவாரி.

இனப்படுகொலைக்கு தமிழ்நாடு அரசு அழைப்பாம்: மனுதாரர் வினித் ஜிண்டல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜ் கிஷோர் சத்ரி, தமிழ்நாடு அரசே இனப்படுகொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் மிக கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து எதிர்த்தார்.

4 வழக்குகளை ஒன்றாக விசாரிக்க முடிவு: இதனைத் தொடர்ந்து சனாதன எதிர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மொத்தம் 4 வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+