நாட்டில் ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்குபடுத்த.. 12 பேர் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: இந்தியாவில் சரியான முறையில் ஆக்சிஜன் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்யவும், ஆக்சிஜன் விநியோகத்தில் அரசுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்கவும் 12 பேர் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரசின் 2ஆம் அலை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் பொதுமக்கள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் தலைநகரிலேயே நடந்துள்ளது.

டாஸ்க் ஃபோர்ஸ்
டெல்லிக்கு தேவையான அளவு ஆக்சிஜனை மத்திய அரசு வழங்குவதில்லை என ஆம் ஆத்மி அரசும் குற்றஞ்சாட்டியது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கு பிறகே தலைநகருக்கு தேவையான சுமார் 470 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் சரியான முறையில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய 12 பேர் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணி என்ன
ஆக்சிஜன் விநியோகம் மட்டுமின்றி கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்த டாஸ்க் ஃபோர்ஸின் பணியாகும். தற்போது நாட்டில் உருவாகியுள்ள சவாலைச் சமாளிக்க இந்த வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் உதவும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு
இந்த ஃடாஸ்க் போர்ஸின் பதவிக்காலம் தொடக்கத்தில் ஆறு மாதங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் இதன் பதவிக்காலம் நீட்டிக்கப்படும். மத்திய அரசு இந்த டாஸ்க் ஃபோர்சுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த டாஸ்க் ஃபோர்ஸ் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் வரை தற்போதைய நடைமுறையை மத்திய அரசு பின்பற்றலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

டாஸ்க் ஃபோர்ஸில் இருப்பது யார்
டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர்கள்
இந்த டாஸ்க் ஃபோரிஸில் நாடு முழுவதும் உள்ள துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
1. அமைச்சரவை செயலர்
2. மத்திய சுகாதாரத் துறை செயலர்
3. டாக்டர் பபாடோஷ் பிஸ்வாஸ், முன்னாள் துணைவேந்தர், மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், கொல்கத்தா
4. டாக்டர் தேவேந்தர் சிங் ராணா, தலைவர், மேலாண்மை வாரியம், சர் கங்கா ராம் மருத்துவமனை, டெல்லி
5. டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, பெங்களூரு நாராயண ஹெல்த்கேர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
6. டாக்டர் ககன்தீப் காங், பேராசிரியர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர், தமிழ்நாடு
7. டாக்டர் ஜே.வி. பீட்டர், இயக்குநர், கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, வேலூர், தமிழ்நாடு
8. டாக்டர் நரேஷ் ட்ரேஹான், குருக்ராம், மேடந்தா மருத்துவமனை மற்றும் இதய நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
9. டாக்டர் ராகுல் பண்டிட், இயக்குநர், கிரிட்டிகல் கேர் மெடிசின் மற்றும் ஐ.சி.யூ, ஃபோர்டிஸ் மருத்துவமனை, முலுண்ட் (மகாராஷ்டிரா) மற்றும் கல்யாண் (மகாராஷ்டிரா)
10. டாக்டர் சௌமித்ரா ராவத், சர் கங்கா ராம் மருத்துவமனை, அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் கல்லீரல் மாற்றுத் துறையின் தலைவர் டெல்லி
11. டாக்டர் சிவ்குமார் சாரின், மூத்த பேராசிரியர் மற்றும் கல்லீரல் துறைத் தலைவர், இயக்குநர், கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.பி.எஸ்), டெல்லி:
12. டாக்டர் ஜரிர் எஃப் உட்வாடியா, மார்பக நோய் மருத்துவ ஆலோசகர், இந்துஜா மருத்துவமனை, ப்ரீச் கேண்டி மருத்துவமனை மற்றும் பார்சி பொது மருத்துவமனை, மும்பை
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications