"கிளைமேக்ஸ்".. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.. பரபரப்பில் தொண்டர்கள்!
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை(அதாவது இன்று வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உச்சநீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை(அதாவது இன்று வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உச்சநீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அதிமுக பொதுக்குழு வழக்கு
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுக பொதுக்குழவின் நிகழ்ச்சி நிரலில் பன்னீர் செல்வத்தை நீக்குவது இல்லாதபோது பன்னீர் செல்வத்தை எப்படி நீக்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்பட விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் பன்னீர் செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார் என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமை ஏன்?
அதேபோல் கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று அதிமுக தலைமை அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரட்டைத் தலைமைக்குப் பதில் ஒற்றைத் தலைமை முறை கொண்டுவரப்பட்டது பற்றி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், இரட்டைத் தலைமை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஒற்றைத் தலைமை கொண்டுவரப்பட்டது.

தமிழ்மகன் உசேன் வாதம்
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பன்னீர் செல்வத்தைவிட எடப்பாடி பழனிசாமிக்கே அதிக ஆதரவு இருந்தது. பொதுக்குழுவில் உரிய விதிமுறைகளை பின்பற்றியே ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கப்பட்டது. பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்தது. அதன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. பொதுக்குழுவை எப்போது வேண்டுமானாலும் கூட்டலாம் என்று அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் வாதிடப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து ஜனவரி 2வது வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜன.16ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்திரவிட்டது. இதன்பின்னர் அதிமுக பொதுக்குழு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தீர்ப்பு வெளியாகிறது
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (அதாவது இன்று வியாழக்கிழமை)தீர்ப்பு வழங்க உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 ம் தேதி நடக்க உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாக உள்ளது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications