தேர்தல் பத்திரம்- சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரும் மனுக்களை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பத்திர முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பொதுநலன் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறும் என பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்தப் பொதுநலன் மனுக்களை நாளை விசாரிக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறக் கூடிய திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.12,145.87 கோடி.இதில் தமிழ்நாட்டின் கோவை மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.1,365 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியிருந்தது. தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் ரூ.966 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கியது.

electoral bonds supreme court

தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக இந்த நடைமுறையையே ரத்து செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். இது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம், தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும், தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அரசு சாரா நிறுவனங்கள் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அதில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் விசாரணை ஏஜென்சிகள் இடையேயான தொடர்புகள்; போலி நிறுவனங்கள் மூலமான தேர்தல் பத்திர நன்கொடை ஆகியவை குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் நாளை விசாரிக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+