உச்சநீதிமன்ற தீர்ப்பு: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி எந்த நிமிடத்திலும் டிஸ்மிஸ்? டெல்லியில் அவசர ஆலோசனை!
டெல்லி: தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்கள், விமர்சனங்களை எதிர்கொண்டதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை முன்வைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக நிறுத்தி வைத்திருந்தார்; மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்தார். அப்படி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் 2-வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பிய போதும் அவர் ஒப்புதல் தரவில்லை.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. ஆளுநர்கள் என்பவர்கள் தனிப்பட்ட அதிகாரம் கொண்டவர்கள் அல்ல; மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள்தான்; அரசியல் வாதிகளைப் போல ஆளுநர்கள் நடந்து கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்தது.
அத்துடன் நிற்காமல், இந்திய வரலாற்றில் முதல் முறையாக, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்; ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் செல்லாது எனவும் அறிவித்தது உச்சநீதிமன்றம். மேலும் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒப்புதலும் தந்தது.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் கடிவாளம் போட்டிருக்கக் கூடியது. இதனால் மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்று வருகின்றன.
உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளான ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கம் செய்ய வேண்டும்; ஆளுநர் ரவி உடனே பதவி விலக வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தால், சட்டவிரோதமாக செயல்பட்ட ஆளுநர் என விமர்சிக்கப்பட்ட பின்னரும் தார்மீக ரீதியாக ஆளுநர் பொறுப்பில் ஆர்.என்.ரவி நீடிக்க முடியாது என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த உத்தரவிட்டுள்ளாராம். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றுவது தொடர்பாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications