மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது குறித்து விதிமுறை வகுக்க நேரிடும்- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: மாநில சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்காமல், முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது, கிடப்பில் போடுவது தொடர்ந்தால் ஆளுநர்கள் முடிவெடுப்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் (ஆரிப் முகமது கான்) அனுப்பி வைத்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் காலதாமதம் இல்லாமல் முடிவெடுக்க வேண்டும். 2 ஆண்டுகளாக மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தது ஏன்? பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் இல்லாமல் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் செயல்படாமல் போனால் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே விதிமுறைகளை வகுக்க நேரிடும். மாநில முதல்வரை ஆளுநர் சந்திப்பது என்பது அரசியல் கணக்குகளை தீர்க்கவா? என கடுமையாக எச்சரித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றைய விசாரணையின் போது தெரிவித்த முக்கிய கருத்துகள்:
- மாநில சட்டசபைகளில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.
- மாநில சட்டசபை மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவில்லை என்கிற சர்ச்சைகளை இதற்கு முன்னர் கேள்விபட்டது இல்லை.
- கேரளா அரசு 3 அவசர சட்டங்களை இயற்றியது. இதற்கான 8 மசோதாக்களை நிறைவேற்றியது. இதில் 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் 23 மாதங்களாக நிலுவையில் வைத்துள்ளார். தற்போது 7 மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் என்னதான் செய்து கொண்டிருந்தார்?
- மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கேரளா ஆளுநர் காலம் தாழ்த்துவதற்கான காரணம் எதுவுமே தெரியவில்லை.
- ஆளுநர்கள், மசோதாக்களுக்கு காலம் தாழ்த்தும் போக்கு தொடர்ந்தால் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்க நேரிடும்.
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் முதல்வரை ஆளுநர் சந்திக்க விரும்புவது அரசியல் கணக்குகளைத் தீர்த்து கொள்ளவா?
முன்னதாக, கேரளா ஆளுநர் ஆரீப் முகமது கான் வேண்டும் என்றே மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர் தாமதமப்படுத்துகிறார். மாநில அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்தான் அது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருக்கிறார். கேரளா அரசின் 7 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? மசோதாக்களை தாமதப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார் என கேரளா அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications