வேலை நேரத்திற்கு பிறகு.. ஊழியர்களுக்கு மெயில், மெசேஜ் அனுப்ப கூடாது! தனிநபர் மசோதா அறிமுகம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், வேலை நேரத்திற்கு பிறகு ஊழியர்களுக்கு மெயில், மெசேஜ் அனுப்ப கூடாது என்கிற அம்சங்களை உள்ளடக்கிய, வேலை வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த புதிய தனிநபர் மசோதாவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே அறிமுகம் செய்துள்ளார்.
இந்தியாவில் உழைப்பாளிகள் சுரண்டப்படும் விதம் கொஞ்சம் வித்தியாசமானது. கஷ்டப்பட்டு படித்து விட்டு வந்தால், கெரியர் வளர்ச்சிக்கு நீ கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும் என்று உருட்டி, இளைஞர்களை அடி மாட்டு சம்பளத்திற்கு 2-3 ஆண்டுகள் வரை கசக்கி பிழிந்துவிடுவார்கள். சரி கத்துக்க வேண்டியதை கற்றுக்கொண்டால், புரொடக்ஷன் எங்கே என்று போட்டு தாளித்து எடுத்துவிடுவார்கள். 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் 9-10 மணி வரை நிச்சயம் வேலை இருக்கும்.

கார்ப்பரேட்களின் சேட்டை
சரி செய்த வேலைக்கு கூலி எங்கே என்று கேட்டால், யாரெல்லாம் போனஸ், அப்ரைசல் கேட்கிறார்களோ அவர்களை மட்டும் டார்கெட் செய்து காலி செய்வது. அப்புறம் என்ன? புதுசா இன்னொரு இளைஞரை வேலைக்கு கொண்டுவருவது. இப்படித்தான் இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகளின் சந்தை இருக்கிறது. அதிலும் குறிப்பாக பணி நேரம் முடிந்த பின்னர் மெயில் அனுப்புவது, வேலையில் அமர சொல்வது, ஆள் இல்லை என்று சொல்லி டியூட்டி போடுவது என முதலாளிகள் செய்யும் சேட்டை கொஞ்ச நஞ்சம் கிடையாது.
தொழிலாளர்களின் முழக்கம்
இந்நிலையில் ஐடி துறையில், 'say to no' என்கிற முழக்கம் அதிகரித்துள்ளது. அதாவது பணி நேரத்திற்கு பின்னர், மீண்டும் பணியில் அமர சொன்னால் அவர்களிடம் நோ சொல்லுங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும் கார்ப்பரேட் முதலாளிகள் இதையெல்லாம் கண்டுக்கொள்வது போல தெரியவில்லை.
இந்நிலையில், வேலை நேரத்திற்கு பிறகு ஊழியர்களுக்கு மெயில், மெசேஜ் அனுப்ப கூடாது என்கிற அம்சங்களை உள்ளடக்கிய, வேலை வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த புதிய தனிநபர் மசோதாவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளார்.
புதிய மசோதா
8 மணி நேரம் வேலை, 8 மணி நேர உறக்கம், குடும்பத்துடன் செலவழிக்க 8 மணி நேரம் என்று பல்வேறு நாடுகளும் நேர வரை முறையை பின்பற்றி வருகின்றன. 8 மணி நேர வேலைக்கு பின்னர் நிறுவனத்தின் தொடர்பிலிருந்து முற்றிலுமாக துண்டித்துக் கொள்வது என்பது தொழிலாளியின் உரிமை என்று பிரான்ஸ், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றன. இந்நிலையில் இதே போன்ற சட்டத்தை இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டும் என்று எம்பி சுப்ரியா சுலே தனது மசோதாவில் வலியுறுத்தியுள்ளார்.
வேலை சொன்னால் நோ சொல்லுங்கள்
துண்டித்துக் கொள்ளும் உரிமை 2025 என்கிற பெயரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் மன அழுத்தம், தனிப்பட்ட-தொழில் வாழ்க்கைப் பதற்றத்தைக் குறைக்க இந்த உரிமையை அங்கீகரிக்க மசோதா கோருகிறது. உலகப் பொருளாதார மன்றத் தகவல்படி, பணியாளர்கள் எப்போதும் மெயில் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டால், அவர்கள் தூக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனை 'டெலிப்ரஷர்' என்று குறிப்பிடுவார்கள்.
'டெலிப்ரஷர்' பாதிப்பு
'டெலிப்ரஷர்' பணி-வாழ்க்கைச் சமநிலையைப் பாதித்துள்ளன. பணி செய்திகளைத் தொடர்ந்து கண்காணிப்பது மூளைக்குச் சுமையைக் கொடுத்து, 'இன்ஃபோ-ஒபிசிட்டி' (அதிகத் தகவல் பருமன்) நிலைக்கு வழிவகுக்கும் எனவும் மசோதா குறிப்பிடுகிறது.
எனவே பணி நேரத்திற்குப் பிறகு நிறுவனம் தொடர்பு கொண்டாலும், ஊழியர்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாயமில்லை, மறுக்கும் உரிமை உண்டு என்பதை இந்த மசோதா வலியுறுத்துகிறது. இதனால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது. ஷிப்ட் டைம் முடிந்த பின்னர், வேலை தொடர்பாக மெயில்கள், போன் கால்கள் ஆகியவற்றிக்கு பதில் அளிக்க அவசியமில்லை என்பதை உரிமையாக மாற்றும் விதமாக, கம்பெனிகளில் 'பணியாளர் நல ஆணையம்' நிறுவப்பட வேண்டும். இவ்வாணையம், பணிக்கு வெளியே டிஜிட்டல் பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்யும்.
நிறுவனங்களுக்கு அபராதம்
10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட நிறுவனங்கள், சங்கங்களுடன் பேசி, பணிநேரமல்லாத வேலை விதிமுறைகள், சாதாரண ஊதியத்தில் கூடுதல் நேரம் போன்றவற்றை முடிவு செய்ய ஆணையம் அறிவுறுத்த வேண்டும். அரசு, நிறுவனங்களுடன் இணைந்து பணி-வாழ்க்கைச் சமநிலைக்கு ஆலோசனை, 'டிஜிட்டல் டிடாக்ஸ்' மையங்களை வழங்க வேண்டும். விதிகளை மீறினால், பணியாளர் மொத்த ஊதியத்தில் 1% அபராதம் விதிக்கப்பட வேண்டும் என மசோதா வலியுறுத்துகிறது.
இதையெல்லாம் அப்படியே நிறுவனங்கள் ஃபாலோ பண்ணிட்டாலும்.. என்று இதை படிக்கும்போதே நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். அது உண்மைதான். நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாக்கள் சட்டம் ஆவது மிகக் கடினம். இதுவரை 14 மட்டுமே சட்டமாகியுள்ளன. கடைசியாக கடந்த 1970 ஆகஸ்ட் 9 அன்று தனிநபர் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications