28 வயது பிரபல மாடல் தற்கொலை.. சிக்கும் இளம் ஐபிஎல் பிரபலம்? போலீஸ் வசம் சென்ற "அந்த" வாட்ஸ்அப் சாட்!
டெல்லி: 28 வயது பிரபல மாடல் தற்கொலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பிரபல இந்திய வீரர் பெயரும் அடிபடுகிறது. இதனால் போலீசார் விசாரணையை அவர் பக்கம் திருப்பியுள்ளனர்.
28 வயது பிரபல மாடல் தன்யா சிங் என்பவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே வழக்கு விசாரணையில் யாருமே எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி இருக்கிறது.
யார் அவர்: தன்யா சிங் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், இந்த மர்மமான மரணத்தில் தடயங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கில் ஐபிஎல் பிரபலம் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா. இந்த இருவருக்கும் இடையே தொடர்புகள் இருப்பதை முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
உயிரிழந்த மாடல் தன்யா வாட்ஸ்அப்பில் அபிஷேக் சர்மாவுக்கு மெசேஜ் செய்துள்ளார். இருப்பினும், அதற்கு அபிஷேக் தரப்பில் இருந்து எந்தவொரு ரிப்ளையும் வரவில்லை என்று இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "உயிரிழந்த மாடலுடன் அபிஷேக் சர்மா நட்பில் இருந்ததை விசாரணையில் கண்டறிந்துள்ளோம். அடுத்த கட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று நினைக்கிறோம்" என்கிறார்கள்.
போலீஸ் திட்டம்: போலீசார் தரப்பில் இன்னும் அபிஷேக் ஷர்மாவை அதிகாரப்பூர்வமாகத் தொடர்பு கொள்ளவில்லை. இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் விளக்கம் பெற அவருக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த ரிப்ளை இல்லாத மெசஜ்கள் தான் போலீசார் தங்கள் விசாரணையை அபிஷேக் சர்மா மீது திருப்பக் காரணமாக இருக்கிறது. மேலும், இருவருக்கும் இடையே எந்த மாதிரியான நட்பு என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
அபிஷேக் ஷர்மா மாடல் அழகி தன்யாவின் மொபைல் எண்ணை பிளாக் செய்து வைத்துள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களிலும் தன்யா அனுப்பும் மெசேஜ்களுக்கு அபிஷேக் சர்மா பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆல்-ரவுண்டரான அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.
யார் அவர்: மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரான தன்யா தனது பெற்றோருடன் வசித்து வந்தார், கடந்த திங்கள்கிழமை காலை அவரை எழுப்ப அவரது தந்தை பன்வர் சிங் சென்றபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 28 வயதான தன்யாவுக்கு பல்வேறு சமூக ஊடக வலைத்தளங்களில் கணிசமாக பலோயர்ஸ்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் உயிரிழந்த இடத்தை முழுமையாக செக் செய்த போலீசார் அங்கே கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து இப்போது போலீசார் தான்யா சிங்கின் தொலைப்பேசியில் இருக்கும் அழைப்பு விவரங்களை செக் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்,. அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப் உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications