களமிறங்கிய "ஸ்லீப்பர் செல்கள்"? நாடு முழுவதும் 4 மாதங்களில் 24 ரயில்களை கவிழ்க்க "நாசவேலை"?
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 24 ரயில்களை கவிழ்ப்பதற்கு திட்டமிட்ட நாசவேலைகள் நடத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளது. ரயில்வே தண்டவாளங்களில் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைப்பது, தண்டவாள இணைப்புகளை அகற்றுவது உள்ளிட்ட நாசவேலைகளில் சமூக விரோதிகள் திட்டமிட்டே செயல்பட்டு வந்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் மைசூர் நகரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் சென்னை அருகே கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயங்கரமான விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். 1700 பேர் பயணித்த நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டன. தேசியப் புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வும் விசாரணை நடத்தியது. இதனால் கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 4 மாதங்களில் மட்டும் 24 இடங்களில் ரயில்களை கவிழ்க்க நாசவேலைகள் நடந்திருப்பதாக ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து லக்சர் நோக்கி சென்ற சரக்கு ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.
இதேபோல உத்தரப்பிரதேசத்தின் பிலாஸ்புர் ரோடு- உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ராபூர் இடையே பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தின் குறுக்கே 7 அடி நீள இரும்பு கம்பி போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் அருகே தண்டவாளத்தில் தண்டவாளத்தை காங்கிரீட் சிலாப்புகளுடன் இணைக்கும் இரும்பு தகடுகள் திட்டமிட்டே அகற்றப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் கான்பூர் அருகே தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதஙளில் மட்டும் இப்படி மொத்தம் 24 நாசவேலைகள் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த நாசவேலைகள் யாருக்காக செய்யப்பட்டது? நாசவேலைகளில் ஈடுபட்டது ஸ்லீப்பர் செல்களா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications