தமிழக எம்பிக்கள் வலியுறுத்தலால்.. வழிக்கு வந்த NTA! ஸ்வயம் தேர்வு மையம் குறித்து அறிவிப்பு!
டெல்லி: தேசிய தேர்வு முகமை நடத்தும் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் தேர்வுக்கு, தமிழக மாணவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இது குறித்து தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து மட்டும் 50 மாணவர்களுக்கு கர்நாடகத்தின் மைசூர் , மங்களூர் , பெங்களூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்பி சு.வெங்கடேசன், திமுக தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தற்போது தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தேசிய தேர்வு முகமை நடத்தும் பி.எட் மாணவர்களுக்கான Swayam ( ஸ்வயம்) தேர்வுகள் வரும் டிசம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது . இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத கல்வியியல் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் .
அந்தத் தேர்வுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது .
குறிப்பாக தஞ்சாவூரில் இருந்து மட்டும் 50 மாணவர்களுக்கு கர்நாடகத்தின் மைசூர் , மங்களூர் , பெங்களூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறித்து ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு செய்யாத தேர்வு மையங்களான பக்கத்து மாநிலங்களான கர்நாடகா , கேரளா மாநிலங்களில் பல நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டின் கல்வியியல் கல்லூரி மாணவர்களால் ஸ்வயம் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன்.
தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாட்டிற்குள்ளேதே தேர்வு மையங்களை ஒதுக்கி தேசிய தேர்வு முகமை புதிய தேர்வு நுழைவுச் சீட்டினை வழங்கி உள்ளது. இதனால் இந்தத் தேர்வுக்காக அண்டை மாநிலங்களுக்கு பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .
வரும் காலங்களில் ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள் , நுழைவுத் தேர்வுகள் என அனைத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கும் இந்த மாதிரியான நடவடிக்கையில் அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கியமைக்காக தேசிய தேர்வு முகமைக்கும் , ஒன்றிய அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications