"குடிபோதை.." நடுவானில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்.. விமானத்தில் எல்லை மீறிய பயணி! பகீர் சம்பவம்
டெல்லி: விமானத்தில் மதுபோதையில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் நடந்துள்ளது.
நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக விமானத்துறை இருக்கிறது. இந்தியாவில் விமானங்களில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
கொரோனா காலம் தவிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

விமான துறை
இந்தியாவில் லோ காஸ்ட் கேரியர் எனப்படும் குறைந்த விலை விமானத்தில் பயணிப்பதையே இந்தியாவில் பலரும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே முக்கிய காரணம். அதேநேரம் சமீப காலங்களாக இந்திய விமான துறைக்கு போதாத காலம் போல.. தொடர்ச்சியாக விமானங்களில் நடக்கும் மோசமான சம்பவங்களே செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. நடுவானில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தது முதல் பல மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. இது பேசுபொருளாகியுள்ளது.

பாங்காக் மும்பை விமானம்
இதனிடையே மீண்டும் அதேபோல பகீர் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாங்காக்கில் இருந்து மும்பை வரும் இண்டிகோ 6E-1052 விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். விமானம் வழக்கம் போல பாங்காக்கில் இருந்து கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் பயணிகளுக்கு அவர்கள் உணவுகளைப் பரிமாற ஆரம்பித்துள்ளனர். அப்போது ஒரு பயணி கடல் உணவு கேட்டுள்ளார்.

கை பிடித்து இழுத்து
இருப்பினும், அப்போது கடல் உணவு தீர்ந்துவிட்டதால், அவரிடம் அந்த பெண் பொறுமையாக இதை எடுத்துச் சொல்லியுள்ளார். அதற்குப் பதிலாக அவருக்கு சிக்கன் உணவை வழங்கியுள்ளனர். அதன் பின்னர் உணவுக்குப் பணம் செலுத்த அவரிடம் ஏடிஎம் கார்டு கேட்டபோது, அவர் அந்த பணிப்பெண்ணின் கைகளைப் பிடித்து இழுத்துள்ளார். கையை தட்டி விட்ட அந்த பெண் ஏடிஎம் கார்டு பின்னை கேட்டுள்ளார்.

குடிபோதை
அப்போது திடீரென எழுந்த அந்த பயணி, அனைவருக்கும் முன்னிலையிலேயே அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அந்த பயணி குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பணிப்பெண் கூறுகையில், "நான் அவருக்கு சிக்கன் சர்வ் செய்தேன். அதன் பின்னர் பணம் செலுத்த அவரது ஏடிஎம் கார்டைக் கேட்டேன். கார்டை ஸ்வைப் செய்யும் சாக்கில், அவர் என் கையைப் பிடித்தார். நான் அதைத் தட்டி விட்டேன். ஏடிஎம் கார்டின் பின்னை போடச் சொன்னேன்.

அத்துமீறிய இளைஞர்
அப்போது அந்த பயணி எழுந்து மற்ற பயணிகளின் முன்னிலையில் என்னிடம் அத்துமீறினார். அவர் தவறாக நடந்துகொள்கிறார் என்று நான் கூச்சலிட்டபோது, அவர் மீண்டும் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்துவிட்டார்" என்றார். இது தொடர்பாக இண்டிகோ நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளது.. அதன்படி பாங்காக்- மும்பை விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறிய அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அவர், 63 வயதான கிளாஸ் எரிக் ஹரால்ட் ஜோனஸ்ம் என்று அவர் தெரிவித்தார்.

கைது
மும்பையில் விமானம் தரையிறங்கியதும் கிளாஸ் எரிக்கை விமான ஊழியர்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நடுவானில் பணிப்பெண்ணிடம் நடந்த இந்த அத்துமீறல் சம்பவத்தை இண்டிகோ நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்தில் தேவையான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. அதேநேரம் இது குறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

தொடரும் சம்பவங்கள்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே நடுவானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மூன்று மாதங்களில் விமானத்தில் மோசமாக நடந்து கொண்டதாகக் கைது செய்யப்படும் 8ஆவது பயணி எரிக் ஆவர். முன்னதாக கடந்த மார்ச் 23ஆம் தேதி, துபாய்-மும்பை இண்டிகோ விமானத்தில் பயணித்த இருவர் மது போதையில் மிக மோசமாக நடந்து கொண்டனர். இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications