சோதித்து பார்க்காதீங்க! நாங்க யாருன்னு அமெரிக்காவிடம் கேளுங்க.. பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி பிடித்த பிறகு முதன் முதலாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வருகை தந்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். அப்போது, பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மையை மீறுவதாக குற்றம் சாட்டிய தாலிபான் அமைச்சர், "ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை தொடர்ந்து பாகிஸ்தான் மீறுவதாகவும், எங்களின் துணிச்சலை சோதித்து பார்க்க வேண்டாம்" என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறின. இதையடுத்து, அங்கு அதிகாரத்தை தாலிபான்கள் பிடித்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் அரசை பல்வேறு நாடுகளும் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

taliban-foreign-minister-visits-india-for-the-first-time-since-takeover-warns-pakistan-over-cross-b

பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை

இந்த நிலையில்தான், ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஒருவார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியாவில் வரும் 16-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், அந்த நாட்டின் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.

டெல்லியில் இருநாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு தாலிபான்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும் போது, பாகிஸ்தானை பகிரங்கமாக எச்சரித்தார்.

எங்கள் துணிச்சலை சோதித்து பார்க்க வேணாம்

முத்தாகி பேசுகையில், "நாங்கள் என்ன செய்வோம் என்று நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை தொடர்ந்து பாகிஸ்தான் மீறுவதாகவும், எங்களின் துணிச்சலை சோதித்து பார்க்க வேண்டாம்" என்றும் கூறினார்.

"ஆப்கானிஸ்தானின் துணிச்சல் மீது சந்தேகம் இருந்தால், பாகிஸ்தான் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் நேட்டோவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். பல ஆண்டுகளாக மோதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் அமைதி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் ஒரு சுதந்திர நாடாகவே உள்ளது. ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற உறுதி அளிக்க, ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் குழு இந்தியாவிற்கு வருகை தர உள்ளது" என்றார்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த பல காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மோசமானது. கடந்த மே மாதம் இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போனது. இப்போது தாக்குதல் இல்லை என்றாலும், இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் தொடர்ந்தே வருகிறது.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை, இந்தியாவுடன் நீண்ட காலமாக நல்லுறவே நீடித்து வருகிறது. இது தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் தொடருமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்தியாவுடன் அதே நல்லுறவை பேண தாலிபான்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே வேளையில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானுக்கும் தாலிபான்களுக்கும் அவ்வளவாக நல்லுறவு இல்லை.

பதற்றத்தை தூண்டும் வகையில்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ்ரீக்-இ-தாலிபான் முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியுள்ளது. ஏற்கனவே ஆப்கான்-பாகிஸ்தான் இடையே பதற்றம் இருக்கும் நிலையில், இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை தூண்டும் விதமாக அமைந்தது.

காபூலில் நடைபெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டியிருந்த ஆப்கானிஸ்தான், அதுதொடர்பான மேலதிக விவரங்களை தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி இயக்கத்தின் தலைவர்கள், குறிப்பாக அதன் தலைவர் நூர் வாலி மெஹூத் என்பதை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலில் மெஹூத் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. காபூலில் நடந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டும் நிலையில், மேற்கூறிய எச்சரிக்கையை தாலிபான்கள் விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+