"உலகிலேயே பழமையான மொழி தமிழ்".. அனைவரையும் கற்க தூண்டுகிறது.. ‛மன் கீ பாத்’தில் நெகிழ்ந்த மோடி!
டெல்லி: ‛‛பிரதமர் நரேந்திர மோடி தனது 129வது 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசினார். அப்போது, ‛‛ உலகிலேயே பழமையான மொழி தமிழ் தான். இன்று நாட்டின் பிற பகுதிகளிலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழி மீது புதிய ஈர்ப்பு காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வாரணாசியில் நடந்த காசி தமிழ்ச் சங்கமத்தின்போது, தமிழ் கற்று கொள்வதற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 'தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளின் கீழ், வாரணாசியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன'' என்று பெருமையுடன் கூறினார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் ‛மன் கி பாத்' எனும் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில் தான் 129 வது ‛மன் கி பாத்' நிகழ்ச்சி இன்று வெளியானது. இதில் பிரதமர் மோடி தமிழ் மொழியை புகழ்ந்து பேசினார்.

அதோடு தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
‛‛ஃபிஜி நாட்டின் ராகிராகி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு மாணவர்கள் கவிதைகள் வாசித்தும், உரைகள் நிகழ்த்தியும் தங்கள் மொழியின் பெருமையை வெளிப்படுத்தினர். இந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை வெளிநாடுகளில் வளர்ப்பதற்கான பாராட்டத்தக்க முயற்சி ஃபிஜியில் நடைபெற்று வருகிறது.
புதிய தலைமுறையினரை தமிழோடு இணைக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த தமிழ் தினக் கொண்டாட்டத்தில் குழந்தைகள் தங்கள் மொழி மீதுள்ள பெருமையை சுதந்திரமாக வெளிப்படுத்தினர். கவிதைகள் பாராயணம் செய்து, உரையாற்றினர். மேடையில் தங்கள் கலாச்சாரத்தை நம்பிக்கையுடன் எடுத்து காட்டினர்.
உலகிலேயே பழமையான மொழி தமிழ். இந்த ஆண்டு வாரணாசியில் நடந்த காசி தமிழ்ச் சங்கமத்தின்போது, தமிழ் கற்று கொள்வதற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ‛தமிழ் கற்கலாம்' என்ற கருப்பொருளின் கீழ், வாரணாசியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன.
தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி ஆகும். இன்று நாட்டின் பிற பகுதிகளிலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தமிழ் மொழி மீது புதிய ஈர்ப்பு காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதான் மொழியின் சக்தி. இதுதான் பாரதத்தின் ஒற்றுமை'' என்றார். காசி தமிழ்ச் சங்கமம் 4.0 முதல் கட்ட நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 2 முதல் 15 வரை வாரணாசியில் நடைபெற்றது. அப்போது 350 மாணவர்கள் வாரணாசியில் இருந்து தமிழ் கற்றுக்கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து ஐம்பது ஆசிரியர்கள் காசியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று தமிழ் மொழி மற்றும் கலாசாரம் பற்றி பாடமெடுத்தனர்.
இந்த வேளையில் துபாயில் தொடங்கப்பட்ட கன்னட பள்ளிக்கூடம் பற்றியும்ப பிரதமர் மோடி பெருமையாக பேசினார். இதுபற்றி அவர், ‛‛"துபாயில் வாழும் கன்னட குடும்பங்கள் தங்களுக்குள் முக்கியமானதொரு கேள்வியை கேட்டுக்கொண்டனர்: 'நம் குழந்தைகள் தொழில்நுட்ப உலகில் சிறந்து விளங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மொழியிலிருந்து விலகிச் செல்கிறார்களா?' இங்கிருந்துதான் 'கன்னட பாடசாலை' என்ற முன்முயற்சி பிறந்தது. இது குழந்தைகளுக்கு கன்னடத்தைப் படிக்கவும், கற்றுக்கொள்ளவும், எழுதவும், பேசவும் கற்றுக்கொடுக்கும் ஒரு முயற்சியாக இப்போது உள்ளது'' என்று கூறினார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications