Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மளிகை கடைகளில் இனிமேல் இது கிடையாது.. 26 கிலோ உணவு பைகளுக்கு ஜிஎஸ்டி.. டெல்லிக்கு ஓடிய விக்கிரமராஜா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 26 கிலோவுக்கு மேல் அடைத்து விற்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து முக்கிய கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் விக்கிரமராஜா வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பான மனு ஒன்றையும் மத்திய அமைச்சரிடம் வழங்கியிருக்கிறார் விக்கிரமராஜா.

அரிசி உள்ளிட்ட சில உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியை மத்திய அரசு விதித்தது.. அதன்படி 25 கிலோ வரையிலான பேக்கிங் செய்யப்பட்ட பிராண்ட் மற்றும் நான் பிராண்டட் அரிசிகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டதால் அரிசியின் விலை உயர்ந்தது.

gst

மளிகை கடைகள்: இதனால் பொதுமக்கள் பலரும் 25 கிலோ பைக்கு பதிலாக, மளிகை கடைகளில் சில்லறை முறையில் வாங்கி வந்தனர்... இதனை மாற்றும் வகையிலும், ஜிஎஸ்டி வரி விதிப்பை தவிர்க்கும் விதமாகவும் 26 கிலோ பேக்கிங் செய்த அரிசி பைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன...

அதன்படி, 25 கிலோ அரிசி பேக்கிங்கிற்கு பதிலாக கூடுதலாக ஒரு கிலோ வைத்து 26 கிலோ பேக்கிங் செய்யும்போது, பொதுமக்களுக்கு ரூ.50 வரை குறையும்.. முன்பிருந்த எல்எம்ஏ விதி தற்போது ரத்து செய்யப்பட்டு, 25 கிலோவுக்கு மேல் செல்லும்போது வரிக்கு உட்படுத்த தேவையில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

அரிசி வியாபாரிகள்: அரிசி வியாபாரிகள் 25 கிலோவுக்கு உட்பட்டது சில்லறை வணிகம் என்றும், 25 கிலோவிற்கு மேல் சென்றால் மொத்த வியாபாரம் என்றும் பிரித்துள்ள நிலையில், ஜிஎஸ்டி விதிகளின்படி அரிசிக்கு சில்லறை வர்த்தகம் செய்வதற்கு மட்டுமே 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, 26 கிலோ பேக்கிங் செய்து விற்பனை செய்யும் போது, அது மொத்த வர்த்தகமாக கணக்கிடப்படும். இது சட்டத்திற்கு உட்பட்டதுதான்.. எனவே, வரி விதிப்பை தவிர்க்க 26 கிலோ அரிசி பேங்கிங் செய்து வருகிறோம் என்றும் காரணம் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மத்திய அரசிடம் சில முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.. டெல்லி சென்ற விக்கிரமராஜா, பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து, வணிகர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வைத்துவருகிறார்.

ஜிஎஸ்டி வரி: அந்தவகையில், மத்திய நுகர்வோர்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்தார். அப்போது, நுகர்வோர் மற்றும் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.

பேரமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு, தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநிலகூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் இந்த மனுவை வழங்கயிருக்கிறார்கள். அந்த மனுவில் இடம்பெற்ற விவரங்கள் வருமாறு:

26 கிலோ பை: "அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் 26 கிலோவுக்கு மேல் பைகளில் அடைத்து விற்பதற்கு இதுவரை வரி விதிப்பு இல்லை. ஆனால், தற்போது 2011 எடையளவுச் சட்டத்தில் பிரிவு 3-ஐ திருத்தம் செய்து, 26 கிலோவுக்கு மேல் அடைக்கப்பட்ட அனைத்துஉணவு பொருட்களும் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருவதற்கானசட்டமுன்வடிவை கொண்டுவர இருப்பதாக அறிகிறேன். இந்த சட்ட முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உறுதியளித்தார் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

எதிர்பார்ப்பு: 26 கிலோவுக்கு மேல் அடைத்து விற்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்க கூடாது என்று டெல்லிக்கே சென்று விக்கிரமராஜா வலியுறுத்தியிருப்பதால், இதற்கான முடிவை மத்திய அரசு என்ன எடுக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+