ஜன.6-ல் சட்டசபையில் மீண்டும் சம்பவமா? பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் சந்திப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தம்மை பகிரங்கமாக 'திராவிட' எதிர்ப்பாளராக வெளிப்படுத்தி வருபவர். திராவிடத்துக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன்னர் தாம் அளித்த பேட்டியையே ராஜ்பவன் எனப்படும் ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அகற்றாமல் வைத்திருப்பவர்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல்களில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ரவி. மேலும் ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக அரசும் உச்சநீதிமன்றம் வரை சென்றும் இருந்தது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போதும் ஆளுநரின் மோதல் போக்கு பகிரங்கமாக இருப்பதும் வழக்கம். கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ரவி உரையாற்ற தொடங்கிய போது, ஆளும் திமுக கூட்டணி கட்சிகளே அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. அப்போது ' தமிழ்நாடு' என்ற பெயரை பயன்படுத்த ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்திருந்தால் தமிழ்நாட்டின் ஆளும் கூட்டணி கட்சிகள் அவருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தன.
மேலும் ஆளுநர் தமது உரையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது; பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்கிற வரிகளையும் திராவிட மாடல் என்ற சொல்லையும் கவனமாக தவிர்த்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்பு சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்த ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்துகொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று என விமர்சித்தார்.

இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத்தில் உரையாற்ற வருகை தந்த ஆளுநர் உரை, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்கிற சர்ச்சையை கிளப்பி 2 நிமிடத்திலேயே தமது உரையை முடித்துக் கொண்டதும் சர்ச்சையானது.
மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து பயனுள்ள ஆலோசனை மேற்கொண்டார். மாநில மக்கள், தமிழ் மொழி, இலக்கியம் மீது அளவற்ற அன்பு செலுத்தும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்… pic.twitter.com/I89fbNE0St
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 24, 2024
இதனிடையே அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை ஆளுநர் உரையுடன் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த பின்னணியில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டசபை கூட இருக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியிருப்பதன் பின்னணி குறித்துதான் தற்போது அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications