பெண்ணையாறு நடுவர் மன்றம்: மத்திய பாஜக அரசு மீண்டும் துரோகம்-உச்சநீதிமன்றத்தில் தமிழகம் எதிர்ப்பு!
டெல்லி: தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைக்காமல் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்டு தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்யும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இத்தனைக்கும் காவிரி நடுவர் மன்றம் அமைத்து தீர்ப்பை பெற்று உச்சநீதிமன்றம் விசாரித்து அது இறுதித் தீர்ப்பை சரி செய்து, காவிரி ஒழுங்காற்று குழு- காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தும் காவிரி நதிநீர் பிரச்சனை ஓயவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையத்துக்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இருந்தும் அதன் உத்தரவுகளை மீறுகிற கர்நாடகா அரசை மத்திய பாஜக அரசு கண்டிப்பதும் இல்லை. இதனால் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல தமிழ்நாடு -கர்நாடகா இடையே தென் பெண்ணையாறு பிரச்சனையும் ஓயாத ஒன்றாக இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யர்கோல் என்னும் இடத்தில் கர்நாடகா அரசு அணை கட்டும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தமிழ்நாட்டின் கோரிக்கையான தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைக்காமலேயே இழுத்தடித்து வருகிறது. உச்சநீதிமன்றமும் தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க கண்டனங்களுடனும் கண்டிப்புடனும் அவகாசம் கொடுத்து ஓய்ந்துவிட்டது. இதனால் கடந்த முறை விசாரணையின் போது, இனி மத்திய அரசு அவகாசமே கேட்கக் கூடாது என வழக்கை ஒத்திவைத்திருந்தது.
தற்போது தமிழ்நாடு- கர்நாடகா இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இருக்கிறோம்; ஆகையால் மேலும் 12 வார கால அவகாசம் கேட்கிறது மத்திய பாஜக அரசு. இது தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைக்காமல் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்கிற அப்பட்டமான துரோகம் என்பதால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தென் பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு இனியும் அவகாசமே தரக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை இதுவரை மத்திய பாஜக அரசு அமைக்காதது அதன் தோல்வியையே வெளிப்படுத்துகிறது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. எத்தனை எத்தனை வஞ்சகம்!
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications